MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஏ இந்தாம்மா முதல் இந்தியன் 2 கனவு வரை.. எதிர்நீச்சல் குணசேகரனின் யாரும் அறிந்திடாத மறுபக்கம்

ஏ இந்தாம்மா முதல் இந்தியன் 2 கனவு வரை.. எதிர்நீச்சல் குணசேகரனின் யாரும் அறிந்திடாத மறுபக்கம்

Ethir Neechal Marimuthu Death : தற்போதைய சூழலில் ட்ரெண்டிங் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் மாரிமுத்து மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார். இது சின்னத்திரை ரசிகர்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்து உள்ளது.

1 Min read
Author : Raghupati R
| Updated : Sep 08 2023, 12:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Ethirneechal Marimuthu

Ethirneechal Marimuthu

நடிகர் மாரிமுத்து என்று சொல்வதை விடவும் எதிர்நீச்சல் குணசேகரன் என்று சொன்னால் அனைவருக்கும் தெரிந்துவிடும். ஆனால் மாரிமுத்து இயக்குனராகவும், நடிகராகவும் பல திரைப்படங்களில் பணியாற்றி விட்டு முதல் முறையாக சின்னத்திரையில் இப்போதுதான் அறிமுகமானார்.

26
SJ Suryah, Marimuthu

SJ Suryah, Marimuthu

வசந்த், எஸ்.ஜே சூர்யா போன்ற இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மாரிமுத்து கண்ணும் கண்ணும் மற்றும் புலி வால் போன்ற படங்களை இயக்கினார். பின்பு மிஸ்கினின் இயக்கத்தில் வெளியான யுத்தம் செய் என்ற படத்தின் மூலம் நடிகராக உருவானார்.

36
G Marimuthu passed away

G Marimuthu passed away

மாரிமுத்துவின் எதார்த்தமான நடிப்பும், அவரின் வசன உச்சரிப்பும் ரசிகர்களை வெகுவாக ஈர்க்க அவருக்கு தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது என்றே சொல்லலாம். முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்து வந்த மாரிமுத்து தற்போது ரஜினியின் ஜெயிலர், கமலின் இந்தியன் 2 ஆகிய படங்களிலும் நடித்து வந்தார்.

46
Ethirneechal Marimuthu Death

Ethirneechal Marimuthu Death

பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழ் சானலில் தமிழா தமிழா என்ற நிகழ்ச்சியில் ஜோசியர்களும், அவர்களை எதிர்ப்பவர்களும் என்ற விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாரிமுத்து ஜோசியர்களுக்கு எதிராக பேசினார்.

56
marimuthu Death

marimuthu Death

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஜாதகத்தின் படி முதலமைச்சர் ஆகவே மாட்டார் என அனைவரும் சொன்னார்கள். ஆனால் அவர் முதலமைச்சர் ஆகிவிட்டார். மேலும் ரஜினி பிறந்த அதே நாளில் அதே நேரத்தில் உலகத்தில் ஒரு லட்சம் பேர் பிறந்துள்ளார். அவர்கள் எல்லாம் ஏன் ரஜினியாக ஆகவில்லை . ரஜினி உழைத்தார் அதன் காரணமாக அவர் சூப்பர்ஸ்டாரானர்.

66
Adhi Gunasekaran Aka Marimuthu

Adhi Gunasekaran Aka Marimuthu

எனவே ஜோசியத்தை எல்லாம் நம்பக்கூடாது என பேசினார் மாரிமுத்து. இது ஜோதிடர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை கிளப்பியது. எந்த அளவுக்கு என்றால், காவல்நிலையத்தில் புகார் கொடுக்கும் அளவுக்கு என்றே சொல்ல்லாம். இந்த நிலையில் இயக்குனர், எதிர்நீச்சல் சீரியல் புகழ் மாரிமுத்து மாரடைப்பு காரணமாக இறந்துள்ளது பொதுமக்கள் இடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாரிமுத்து மறைவால் எதிர்நீச்சல் தொடருக்கு சிக்கல்... அடுத்த ஆதி குணசேகரன் யார்?

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved