சீனாவின் பெல்ட் ரோடு திட்டத்துக்கு ஆப்பு; இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பாவை இணைக்கும் ஜி20-யின் மெகா திட்டம்!
இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா இணைப்பு வழித்தடம் பற்றிப் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "இது உண்மையிலேயே பெரிய விஷயம். இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" என்றார்.
ஜி20 உச்சி மாநாட்டில் உலக நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் முயற்சியாக, பிரதமர் மோடி மற்றும் பிற நாடுகளின் தலைவர்கள், இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா இணைப்பு வழித்தடம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சனிக்கிழமை கையொப்பமிட்டுள்ளனர்.
இந்த வழித்தடத்தில் கையொப்பமிட்ட பிரதமர் மோடி, வர்த்தக இணைப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கு இது ஒரு புதிய திசையை கொடுக்கும் என்று கூறினார். "வரும் காலங்களில், இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவின் பொருளாதார ஒருங்கிணைப்புக்கான ஒரு பயனுள்ள வழித்தடமாக இது மாறும்" என்றும் அவர் கூறினார்.
இத்திட்டத்தைப் பாராட்டிய பிரதமர் மோடி, இந்தப் ஒப்பந்தம் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றார். "வரும் காலங்களில், இது இந்தியா, மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பா இடையே பொருளாதார ஒருங்கிணைப்பின் ஒரு பயனுள்ள ஊடகமாக இருக்கும். இது உலகம் முழுவதும் இணைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான நிலையான திசையை வழங்கும்" என்றார்.
குடிநீர் தேவைக்குத் தான் முன்னுரிமை: கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார் திட்டவட்டம்
வலுவான வர்த்தகத் தொடர்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மனித நாகரிகத்தின் வளர்ச்சிக்கான அடிப்படைகள் என்பதை வலியுறுத்திய பிரதமர், "இந்தியா தனது வளர்ச்சிப் பயணத்தில் வர்த்தக இணைப்பு மற்றும் உள்கட்டமைப்புக்கு அதிக முன்னுரிமை அளித்துள்ளது" என்றார்.
இந்த வர்த்தக வழித்தடம் பற்றிப் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "இது உண்மையிலேயே பெரிய விஷயம். இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நிலையான உள்கட்டமைப்புகளை உருவாக்குதல், தரமான உள்கட்டமைப்பு முதலீடுகளை உருவாக்குதல் மற்றும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குதல்... இந்த பார்வைக்கு உறுதியளிக்க நாம் ஒன்றிணைந்துள்ளோம்" என்று குறிப்பிட்டார்.
தவிர, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனும் இதனை வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று பாராட்டினார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவூதி அரேபியா, ஜோர்டான் மற்றும் இஸ்ரேல் உட்பட மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் உள்ள ரயில்வே மற்றும் துறைமுக வசதிகளை இந்த வழித்தடம் இணைக்கும் எனவும் இந்தத் திட்டம் இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான வர்த்தகத்தை 40 சதவீதம் வரை விரைவுபடுத்தும் திறன் கொண்டது எனவும் கூறப்படுகிறது.
"மும்பையிலிருந்து சூயஸ் கால்வாய் வழியாக ஐரோப்பாவிற்கு கப்பல்களில் சரக்குகளைக் கொண்டுசெல்வதற்கு மாற்றாக, எதிர்காலத்தில் துபாயில் இருந்து இஸ்ரேலின் ஹைஃபாவிற்கும் பின்னர் ஐரோப்பாவிற்கும் ரயில் மூலம் செல்ல முடியும்" என்று யூரேசியா குழுமத்தின் தெற்காசிய பயிற்சித் தலைவர் பிரமித் பால் சவுத்ரி கூறுகிறார். இதன் மூலம் பணமும் நேரமும் மிச்சமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயிலை ஜனவரி 22ஆம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!