மொரோக்கோ நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1037 ஆக உயர்வு! 1,200 க்கு மேற்பட்டோர் காயம்!

மொராக்கோ நிலநடுக்கத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 1037 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,200 பேர் காயம் அடைந்துள்ளனர் எனவும் மொராக்கோ அரசு தெரிவித்துள்ளது.

Morocco Earthquake Update: Death Toll Rises to 1,037, More Than 1,200 Injured sgb

வட ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மேலும், 1,200 க்கும் மேற்பட்டவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் காயம் அடைந்துள்ளனர்.

மொரோக்கோவில் வெள்ளிக்கிழமை இரவு 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் மரகேஷ் நகரில் இருந்து தென்மேற்கு திசையில் 71 கிலோமீட்டர் தொலைவில் 18.5 கிலோமீட்டர் ஆழத்தில் இரவு 11:11 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

கடலோர நகரங்களான ரபாட், காசாபிளாங்கா மற்றும் எஸ்ஸௌயிரா வரை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 1037 ஆக உயர்ந்துள்ளது என மொராக்கோ அரசு தெரிவித்துள்ளது. மேலும், 1,200 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்துள்ளனர் எனவும் அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

சீனாவின் பெல்ட் ரோடு திட்டத்துக்கு ஆப்பு; இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பாவை இணைக்கும் ஜி20-யின் மெகா திட்டம்!

Morocco Earthquake Update: Death Toll Rises to 1,037, More Than 1,200 Injured sgb

அட்லஸ் மலைகளில் உள்ள கிராமங்கள் முதல் வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரமான மராகெச் வரை ஏராளமான கட்டிடங்கள் இந்த பூகம்பத்தில் முற்றிலும் சேதமடைந்துள்ளன. மீட்புப் பணி இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்பபடுகிறது.

மலைப்பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்வதில் சிக்கல் காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜி20 உச்சி மாநாட்டில் உக்ரைன் போர் குறித்த முக்கியத் தீர்மானம்! ரஷ்யா, சீனா ஒப்புதலுடன் கூட்டறிக்கை வெளியீடு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios