MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • காப்பி சர்ச்சைக்கு மத்தியில் கல்லா கட்டும் ஜவான்... பிகில் பட லைஃப் டைம் வசூலை 3 நாளில் முறியடித்து சாதனை

காப்பி சர்ச்சைக்கு மத்தியில் கல்லா கட்டும் ஜவான்... பிகில் பட லைஃப் டைம் வசூலை 3 நாளில் முறியடித்து சாதனை

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் பிகில் படத்தின் லைஃப் டைம் வசூலை மூன்றே நாளில் குவித்து சாதனை படைத்துள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 10 2023, 08:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Shah Rukh Khan

Shah Rukh Khan

கோலிவுட்டில் வரிசையாக நான்கு வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் அட்லீ, பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் ஜவான். ஷாருக்கான் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாராவும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். ஜவான் திரைப்படத்தை ஷாருக்கானும் அவரது கெளரிகானும் இணைந்து அவர்களது ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர்.

24
Jawan movie

Jawan movie

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 7-ந் தேதி திரைக்கு வந்த ஜவான் திரைப்படம் பாலிவுட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தன்னுடைய கமர்ஷியல் மேஜிக்கை பாலிவுட்டிலும் வெற்றிகரகாம செய்துகாட்டி அசத்தி இருக்கிறார் அட்லீ. ஆனால் தமிழ்நாட்டில் வழக்கம்போல் இப்படம் எந்தெந்த படங்களில் இருந்து காப்பியடிக்கப்பட்டது என கண்டுபிடித்து அட்லீ ஒருபுறம் துவம்சம் செய்து வருகின்றனர். இதுகுறித்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்களும் பறக்கின்றன.

இதையும் படியுங்கள்... லியோ படத்துக்காக விஜய் பாடிய பாடலில் கை வைத்த சென்சார் போர்டு... சர்ச்சைக்குரிய வரிகள் அதிரடியாக நீக்கம்

34
Jawan Box Office collection

Jawan Box Office collection

காப்பி சர்ச்சை இருந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வருகிறது ஜவான். முதல் நாளிலேயே ரூ.129.1 கோடி வசூலித்து மாஸ் காட்டிய இப்படம் இரண்டாவது நாளிலும் ரூ.110 கோடியை வாரிக் குவித்து வசூல் வேட்டை நடத்தியது. இந்நிலையில், மூன்றாம் நாளான நேற்றும் ஜவான் படத்தின் வசூல் வேட்டை தொடர்ந்துள்ளது. இப்படம் மூன்றே நாளில் ரூ.350 கோடி என்கிற இமாலய வசூலை வாரிக்குவித்து பாக்ஸ் ஆபிஸில் டாப் கியரில் சென்றுகொண்டிருக்கிறது.

44
Vijay, Atlee, Shah rukh khan

Vijay, Atlee, Shah rukh khan

இதன்மூலம் விஜய்யின் பிகில் படத்தில் லைஃப் டைம் வசூல் சாதனையை ஜவான் படம் மூன்றே நாளில் முறியடித்துள்ளது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படம் மொத்தமாக ரூ.305 கோடி வசூலித்து இருந்தது. அதுமட்டுமின்றி அட்லீ இயக்கிய படங்களில் அதிக வசூலை வாரிக்குவித்த படமாக பிகில் இருந்து வந்த நிலையில், தற்போது அந்த சாதனையை ஜவான் முறியடித்து நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. இன்றும் விடுமுறை தினம் என்பதால் ஜவான் வசூல் ரூ.500 கோடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... என்ன தலைவா இப்படி சிக்கிட்ட! 'ஜவான்' படம் இந்த தமிழ் படத்தின் அட்ட காப்பியாமே? அட்லீயை அலற விடும் நெட்டிசன்கள்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அட்லீ
நயன்தாரா
ஷாருக் கான்
விஜய் சேதுபதி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved