- Home
- Gallery
- Vijay : விறுவிறுப்பான படப்பிடிப்பில் தளபதி 68.. கேமியோவில் அசத்த வரும் 4 Celebrities - வெளியான தகவல் உண்மையா?
Vijay : விறுவிறுப்பான படப்பிடிப்பில் தளபதி 68.. கேமியோவில் அசத்த வரும் 4 Celebrities - வெளியான தகவல் உண்மையா?
Thalapathy Vijay : தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்பட பணிகளை தொடர இன்று தளபதி விஜய் சென்னையில் இருந்து புறப்பட்டு அமெரிக்காவிற்கு சென்றுள்ளார்.

Mankatha
தமிழ் சினிமாவில் நல்ல பல படங்களை கொடுத்து, புகழின் உச்சியில் இருக்கும் இயக்குனராக திகழ்ந்து வருபவர் தான் வெங்கட் பிரபு. ஏற்கனவே தல அஜித்தை வைத்து "மங்காத்தா" என்ற வெற்றி படத்தை கொடுத்த அவர், தற்பொழுது தளபதி விஜய் அவர்களை முதல் முறையாக இயக்கி வருகிறார்.
Sivakarthikeyan
இந்த திரைப்படத்தில் முன்னணி நடிகர், நடிகைகள் பலர் நடித்து வரும் நிலையில், ஏற்கனவே வெளியான தகவலின்படி இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு சிறு கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு கேமியோ ரோலில் மறைந்த கேப்டன் விஜயகாந்தை நடிக்கவைக்க பணிகள் நடந்து வருகின்றது.
venkat prabhu
இந்நிலையில் இப்பொது வெளியான தகவலின்படி இந்த திரைப்படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு அவர்களும் ஒரு சிறு கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது, மேலும் ஏற்கனவே வெளியான விசில் போடு பாட்டில் கிரிக்கெட் வீரர்கள் சிலரும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
trisha
இவையெல்லாம் ஒருபுறம் இருக்க பிரபல நடிகை திரிஷா அவர்களும் இந்த திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று கேமியோவில் நடிக்கவுள்ளாராம். ஆனால் இந்த தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.