இன்டர்மிட்டண்ட் டயட்டை பின்பற்றும் முறை, யார் இன்டர்மிட்டண்ட் டயட்டில் இருக்க வேண்டும் என்பது போன்ற பல கேள்விகளுக்கு தெளிவான விளக்கம்.
16:8 Intermittent Fasting : உடல் எடையை குறைக்க எண்ணற்ற டயட் முறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆனால் அதில் பலருக்கும் முழு பயன்கள் கிடைப்பதில்லை. உடல் எடையை குறைப்பதற்கு விரத முறையும் உதவும். இந்த விரத முறைகளில் ஒன்று தான் இன்டர்மிட்ண்ட் பாஸ்டிங் ( Intermittent Fasting). இதை இடைப்பட்ட உண்ணாவிரதம் என்றும் சொல்வார்கள். இந்த விரத முறையில் உணவு, விரதம் இரண்டும் மாறி மாறி பின்பற்றப்படும். பொதுவாக விரதங்களில் பல வகைகள் இருக்கின்றன. ஆனால் பரவலாக பின்பற்றப்படுவது 16:8 என்ற விரத முறைதான். இந்தப் பதிவில் இன்டர்மிட்ண்ட் விரதமுறை குறித்தும், அதில் என்னென்ன பின்பற்ற வேண்டும் எனவும் காணலாம்.
இடைப்பட்ட உண்ணாவிரதம்:
இந்த விரதம் 16:8 மணி நேரத்தை உள்ளடக்கியது. 16 மணிநேரம் விரதமும், மீதமுள்ள 8 மணி நேரம் சாப்பிடும் நேரமாகவும் இருப்பதை தான் இந்த விரத முறை குறிக்கிறது. இந்த 8 மணி நேரம் என்பது பகலாக இருக்கும்படி விரதத்தை தொடங்க வேண்டும். விரதம் இருக்கும் நாளில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே, அதுவும் ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிட வேண்டும். உங்களுடைய ஆரோக்கியத்தை மேம்படுத்த வாரத்தில் 2 நாட்கள் இந்த விரதம் இருக்கலாம்.
இதையும் படிங்க: 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் intermittent fasting இருக்கலாமா?
எப்போது விரதம்?
இந்த திட்டத்தில் பெரும்பாலானோர் விரதம் இருக்கும்போது மாலை தொடங்கி காலை வரை விரதம் இருப்பார்கள். இதனால் மாலை நேர உணவு தவிர்க்கப்படும். மறுநாள் காலை மற்றும் மதிய உணவுகளை எடுத்துக் கொள்வார்கள். நாள்தோறும் இப்படி சாப்பிடாமல் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. உங்களுக்கு ஏதுவான நாட்களில் இருங்கள்.
இதையும் படிங்க: நடிகர் மாதவன் சொன்ன இண்டர்மிட்டண்ட் ஃபாஸ்டிங்.. அப்படின்னா என்ன? என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
யார் செய்யலாம்?
உடல் எடையையும் கொழுப்பையும் குறைக்க நினைப்பவர்கள் இந்த விரதம் பின்பற்றலாம். ஆனால் மாலை உணவை தவிர்ப்பது அனைவருக்கும் ஏற்றதா? என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இரவு உணவை தவிர்க்க முடியாதவர்கள் தூங்கும் நேரத்திற்கு முன்பாக சுமார் 2 முதல் 3 மணி நேரம் வரைக்கும் எந்த உணவும் எடுத்துக் கொள்ளாதீர்கள். அதற்கு முன்பே சாப்பிடுவது நல்லது. நீங்கள் இந்த முறையை புதியதாக பின்பற்ற நினைத்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
உணவு எடுக்கும் நேரம்;
இரவு நீங்கள் விரதம் தொடங்கும் நேரத்தை பொறுத்து உங்களுடைய காலை உணவு நேரம் மாறுபடும். இங்கே சில கால அளவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
எதை கவனிக்க வேண்டும்?
- ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி விரத நேரத்தை தேர்ந்தெடுக்கக் கூடாது. எப்போதும் விரத நேரம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். விரதம் இருக்கும்போது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிப்பது அல்லது குறைவது போன்ற சிக்கல் ஏற்படாமல் கவனமாக இருக்க வேண்டும்.
- 8 மணி நேரம் சாப்பிடும்போது கண்டதையும் உண்ணாமல் உடலுக்கு ஏற்ற ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். இப்படி செய்வதால் எடைக் கட்டுப்பாட்டுக்கு உதவும். அடிக்கடி உணவு எடுத்துக் கொள்ளாமல் இருக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். பழங்கள், புரதச்சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும்.
எடையும், கொழுப்பும் குறையுமா?
இந்த விரத முறையில் அதிகமாக உண்பதை தவிர்க்க முடியும். இந்த விரத முறையில் வளர்சிதை மாற்றம் அதிகரிப்பதால் எடை மேலாண்மைக்கு உதவுகிறது. கடந்த 2023இல் செய்யப்பட்ட ஓர் ஆய்வில் சரியான கலோரிகளை உட்கொண்டு இடைப்பட்ட உண்ணாவிரதம் இருப்பது எடை குறைப்புக்கு உதவுவதாக தெரிய வந்துள்ளது. அதுமட்டுமின்றி 2023இல் வெளிவந்த ஆய்வு கட்டுரை ஒன்றில் டைப்2 நீரிழிவு, இதய நோய்கள், முடக்குவாதம் ஆகியவற்றை குறைக்க இந்த விரதம் உதவும் என சொல்லப்படுகிறது.
பக்க விளைவுகள்:
தலைவலி, பலவீனமாக உணர்தல், அதிக பசியால் தூண்டப்படுவது, மனநிலையில் மாற்றம், பதற்றம், சோம்பல், மலச்சிக்கல், அதிக எடை குறைவு, 8 மணி நேரத்தில் கட்டுப்பாடின்றி அதிகம் உண்ணுதல் போன்றவை ஏற்படலாம்.
யார் செய்யக்கூடாது?
குறிப்பு: இந்த 16:8 இன்டர்மிட்டண்ட் டயட் முறையை கடைப்பிடிக்க நினைப்பவர்கள் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.