manimegalai a | Updated: Mar 21, 2025, 6:01 PM IST
'கங்குவா' படத்தின் தோல்வியை தொடர்ந்து, நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'ரெட்ரோ'. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். கேங் ஸ்டார் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து, தற்போது சூர்யா மாப்பிள்ளை கெட்டப்பில், பூஜா ஹெக்டேவுடன் குத்தாட்டம் போட்டுள்ள கனிமா பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலை சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளது மட்டும் இன்றி பட்டைய கிளப்பும் விதத்தில் ஆட்டமும் போட்டுள்ளார். விவேக் இந்த பாடலுக்கு லிரிக்ஸ் எழுதியுள்ளார்.