காய்கறியே தேவையில்லை...செம சூப்பரான அப்பளம் குழம்பு ரெசிபி

வீட்டில் காய்கறிகள் ஏதும் இல்லாத போதும், அவசரமாக சூப்பரான குழம்பு செய்ய நினைத்தாலும் அதற்கு சிறப்பான தேர்வாக அப்பளக் குழம்பு இருக்கும். இதன் சுவையே பசியை தூண்ட துவங்கி விடும். கிராமத்து சுவையில் இப்படி ஒரு வித்தியாசமான குழம்பை இதுவரை நீங்கள் சாப்பிட்டிருக்க மாட்டீர்கள்

appalam kulambu recipe

தமிழர் சமையலில் ஒரு எளிய பொருளை கூட பிரமாண்ட சுவையாக மாற்றும் வல்லமை இருக்கிறது! அப்படிப் பேசப்படும் ஒரு அற்புதமான உணவு அப்பளக் குழம்பு. இது மாமியார் வீட்டு ரகசிய உணவு மாதிரியான சுவையை தரும். ஊற வைத்த பருப்பு, வெந்த தக்காளி, சிறிது காரத்துடன் எண்ணெயில் பொரித்த அப்பளங்கள் சேரும் போது அதன் நறுமணத்திலேயே பசி எடுக்க துவங்கி விடும்.  காய்கறிகள் இல்லாத நேரத்தில் கை நிறைய மொறு மொறு அப்பளமிருந்தால், உடனே செய்யக் கூடிய நாட்டுச் சுவை மிக்க குழம்பு இதுதான்.

அப்பளக் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

Latest Videos

அப்பளம் – 6 முதல் 8 (நறுக்கியது)
சின்ன வெங்காயம் – 10 (அல்லது பெரிய வெங்காயம் – 1 நறுக்கியது)
தக்காளி – 2 (நன்றாக பொடியாக நறுக்கியது)
புளி – 1 நெல்லிக்காய் அளவு (தண்ணீரில் கரைத்து கொள்ளவும்)
காய்ந்த மிளகாய் – 2
பச்சை மிளகாய் – 1 (சிறு துண்டுகளாக வெட்டியது)
பூண்டு – 4 பற்கள் (நறுக்கியது)
கருவேப்பிலை – 1 கையளவு
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் – 1 டீஸ்பூன்
கறி மசாலா தூள் – 1/2 டீஸ்பூன் (சுவை அதிகரிக்க)
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய்  – 3 டேபிள்ஸ்பூன்

மேலும் படிக்க:வாழை இலையில் அல்வா செய்து சாப்பிட்டிருக்கீங்களா?

தாளிக்க வேண்டியவை :

கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்து பருப்பு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி

அப்பளக் குழம்பு செய்வது எப்படி?

- முதலில் நல்லெண்ணெய் அல்லது சாதாரண எண்ணெயில் அப்பளங்களை மொறு மொறுவென பொரித்து எடுக்கவும். இது குழம்பில் ஊறி மென்மையாகும். ஆனால் அருமையான தனித்துவமான சுவை கொடுக்கும்!
- கடாயில் 3 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுந்து பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, மிளகாய் சேர்த்து தாளிக்கவும். வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும், தக்காளி சேர்த்து நன்கு மசிது வரும் வரை வதக்கவும்.
- மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து வெந்த தக்காளியில் நன்றாக கலந்து கொள்ளவும்.
- புளி கரைத்த நீரை சேர்த்து 5 முதல் 7 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- குழம்பு கொதிக்க துவங்கியதும், பொரித்த அப்பளங்களை சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடங்கள் வைத்து விடவும்.
- அப்பளங்கள் குழம்பை நன்கு உறிஞ்சும் போது, அவை மென்மையாகவும், அருமையாகவும் இருக்கும்.
-  குழம்பு கொதித்து கடைசியாக ஓரிரு நிமிடங்கள் கழித்து, ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்தால் சுவை இன்னும் ப்ரம்மாண்டமாகும்!

எதுடன் பரிமாறலாம்?

- வெந்த வெண்ணெய் சேர்த்த சாதம்
- சுடச்சுட இடியாப்பம்
- பரோட்டா அல்லது தோசை
- கீரை சாதத்தோடு கூட சூப்பர்!
-  இதை ஒரு நாள் கழித்து சாப்பிட்டால், சுவை இன்னும் பல மடங்கு அதிகமாகும்!

மேலும் படிக்க:ஆரோக்கியமான ராகி மிலெட் முறுக்கு

ஏன் இந்த அப்பளக் குழம்பு செய்ய வேண்டும்?

- சுவையான பாரம்பரிய உணவு . பெரியவர்கள், சிறுவர்கள் விரும்பும் உணவு.
- விரைவாக செய்யக்கூடிய குழம்பு . வெறும் 30 நிமிடங்கள் போதும்.
- காய்கறிகள் இல்லாத நேரத்தில் அப்பளம் மட்டும் இருந்தால் போதும்!
- மொறு மொறு மற்றும் மென்மை இரண்டு விதமான உணவுச் சுவை ஒரே குழம்பில்.

vuukle one pixel image
click me!