ஆரோக்கியமான ராகி மிலெட் முறுக்கு
சிறுதானிய உணவுகளில் அதிகமானவர்கள் அரிசிக்கு மாற்றாக பயன்படுத்தக் கூடியது ராகி தான். ராகியில் உணவுகள் மட்டுமின்றி ஸ்நாக்ஸ் வகைகளும் செய்யலாம். அவற்றில் மிக பிரபலமான ராகி முறுக்கு. இதை வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்பதை வாங்க தெரிந்து கொள்ளலாம்.

ராகி முறுக்கு என்பது வழக்கமான அரிசி முறுக்கிற்கு மாற்றாக, அதிக சத்துக்கள் கொண்ட ஒரு சிறந்த சுவையாக இருக்கும். இந்த முறுக்கு சுவையானதும், ஆரோக்கியமானதும், குறிப்பாக குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு விரும்பி சாப்பிட ஏற்ற ஸ்நாக்காக இருக்கும். .
ராகி மிலெட்டின் மருத்துவ பலன்கள் :
- ராகியில் உள்ள இயற்கையான நார்சத்து நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்தி, உடலுக்கு தேவையான சக்தியை அளிக்கிறது.
- கால்சியம் நிறைந்த ராகி, எலும்பு மற்றும் பற்கள் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. இது சிறுவர்களுக்கும், வயதானவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- இது குறைந்த கார்போஹைட்ரேட் கொண்டதாக இருப்பதால், இரத்த சர்க்கரை நிலையை கட்டுப்படுத்த உதவுகிறது.
- இரும்புச்சத்து நிறைந்த ராகி, ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, இரத்தசோகை நோயைக் குறைக்க உதவுகிறது.
- கொழுப்பு இல்லாத ராகி, உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
ரோட்டு கடை ஸ்டைல் முட்டை சேர்வா... வீட்டிலேயே செய்யும் முறை
தேவையான பொருட்கள் :
ராகி மாவு – 1 கப்
பாசிப்பருப்பு மாவு – 1/2 கப்
அரிசி மாவு – 1/2 கப்
வெண்ணெய் அல்லது நெய் – 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் (விருப்பம்)
உப்பு – தேவையான அளவு
எள் – 1 டீஸ்பூன்
ஓமம் – 1/2 டீஸ்பூன் (செரிமானத்திற்கு உதவும்)
தண்ணீர் – தேவைக்கேற்ப
எண்ணெய் – பொரிக்க
ராகி முறுக்கு செய்வது எப்படி?
- ஒரு பெரிய பாத்திரத்தில் ராகி மாவு, பாசிப்பருப்பு மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய் தூள், எள், ஓமம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.
வெண்ணெயை அல்லது நெய்யை சேர்த்து, கை கொண்டு மாவில் நன்றாக கலக்க வேண்டும்.
- தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மென்மையான மாவாக பிசையவும். மாவு உலர்ந்துவிடாமல், கட்டிகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
- முறுக்கு அச்சில் மாவை வைத்து, சுற்று சுற்றாக முறுக்கு வடிவில் பிழிந்து விட வேண்டும்.
- கடாயில் எண்ணெயை சூடாக்கி, அதில் மிதமான தீயில் முறுக்குகளை பொன்னிறமாக வரும் வரை பொரிக்கவும்.
- எண்ணெய் சரியாக வடிந்து, முறுக்கு மொறு மொறுவென்று வரும் வரை பொறிக்க வேண்டும்.
ராகி முறுக்கின் சிறப்பு :
- மொறு மொறுவென்று இருக்கும்
- குறைந்த எண்ணெய் உட்கொள்வதால், உடலுக்கு நன்மை தரும்
- சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் சிறந்த ஸ்நாக்காக இருக்கும்.
- சூடான டீ, காபி அல்லது தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்
கொங்குநாட்டு ஸ்பெஷல் பருப்பு குழம்பு...என்ன மணம், என்ன ருசி!!
சுவை சேர்க் டிப்ஸ் :
- உப்பு சரியாக இருக்கிறதா என்று பார்க்க, சிறிய துண்டு மாவை எண்ணெயில் போட்டு சுவைக்கவும்.
- எண்ணெய் மிதமான சூட்டில் இருக்க வேண்டும். அதிக சூடு இருந்தால் முறுக்கு கருகிவிடும். குறைந்த சூடு இருந்தால் முறுக்கு எண்ணெயை அதிகம் உறிஞ்சும்.
- உலர்ந்தவுடன் ஒரு காற்றுப்புகா டப்பாவில் சேமிக்கவும்.
- சுவை அதிகரிக்க, கொஞ்சம் பூண்டுத் தூள் சேர்க்கலாம்.

