தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணியை செல்வத்திடம் இருந்து ஷண்முகம் அதிரடி என்ட்ரி கொடுத்து காப்பாற்றிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
24
Zee Tamil Anna serial
அதாவது, ஷண்முகம் நேராக சௌந்தரபாண்டி வீட்டிற்கு வர செல்வமும் ஏகேஎஸ் அண்ணாச்சியும் பறந்து வந்து முன்னாடி விழ ஷாக் ஆகிறார் சௌந்தரபாண்டி. பிறகு சௌந்தரபாண்டி நீயெல்லாம் ஒரு அப்பனா என்று சௌந்தரபாண்டியையும் முத்துபாண்டியையும் அடி வெளுத்து எடுக்கிறான்.
முத்துபாண்டியும் சௌந்தரபாண்டியும் ஷண்முகத்திடம் அடிவாங்கி கதறுகின்றனர், மேலும் ஷண்முகம் அரிவாளை கொண்டு வந்து சௌந்தரபாண்டியை வெட்ட போக எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஷண்முகம் உன்னை வெட்டி கொல்றதால ஒன்னும் நடக்க போவது இல்ல என்று ஆவேசப்படுகிறான்.
44
Anna serial Today Episode
நீ உயிரோட இருக்கும் போதே உனக்கு எதிராக பரணியை நிற்க வைத்து தர்மகத்தா தேர்தலில் அவளை ஜெயிக்க வைத்து காட்டுறேன் என்று சவால் விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.