இந்திய விமானப்படையின் "விங்ஸ் ஆஃப் குளோரி".. மாபெரும் பேரணியை துவங்கி வைக்கிறார் ராஜ்நாத் சிங்!

By Ansgar R  |  First Published Sep 28, 2024, 8:31 PM IST

Wings of Glory : ஏர் வாரியர் பணிகளில் இளைஞர்கள் சேர, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒரு மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது. இது குறித்த பல தகவல்கள் வெளியாகியுள்ளது.


ஒரு தனித்துவமான நடவடிக்கையாக IAF (Indian Air Force) ஆனது, 7000 கிமீ நீளமுள்ள தோயிஸ் (சியாச்சின்) முதல் தவாங் வரையிலான கார் பேரணியை நடத்த முடிவு செய்துள்ளது. இந்திய விமானப்படையில் சேர இளைஞர்களை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட உள்ளது இந்த நிகழ்வு. அதுமட்டுமல்ல போர்க்காலத்திலும், 1948 காஷ்மீர் முதல் 1965, 1971, 1999 வரையிலான போர்களிலும், பாலகோட் தாக்குதல் உள்ளிட்ட போர்களில் நாட்டுக்காக போரிட்ட வீரர்களுக்கு மரியாதையை செலுத்தும் வகையிலும் இந்த பேரணி நடத்தப்படவுள்ளது.

இந்தியாவின் வீர வரலாற்றில் அழியாத இடம்பிடித்துள்ள நிர்மல் ஜித் சிங் செகோன், விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா, கார்கில் மாவீரர் படைத் தலைவர் அஜய் அஹுஜா வி.ஆர்.சி. ஆகியோரை நினைவுகூரும் வகையிலும் இந்த பேரணி அமையவுள்ளது. இந்திய விமான படையின் வாயு வீர் விஜேதாவிற்கு அக்டோபர் 1ம் தேதி, தேசிய போர் நினைவிடத்தில் இருந்து அன்பான வரவேற்பு அளிக்கப்படும். அங்கு இருந்து தான் இந்த அற்புதமா பேரணி துவங்கும்.

Tap to resize

Latest Videos

undefined

அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்த காதி பேஷன் ஷோ – மாநில அரசின் புதிய முயற்சிகளை பாராட்டிய மத்திய அமைச்சர்!

அக்டோபர் 8 ஆம் தேதி விமானப்படை தினத்தன்று தோயிஸில் (சியாச்சின் செல்லும் இந்திய சிப்பாய்களின் போக்குவரத்து நிறுத்தம்) அதன் கொடியேற்றப்படும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 3068 மீட்டர் உயரத்தில் உள்ள உலகின் மிக உயரமான விமானப் படை நிலையங்களில் ஒன்றான லடாக்கின் லெப்டினன்ட் கவர்னர் பிரிக் பி.டி. மிஸ்ரா 9 ஆம் தேதி லேவின் போலோ மைதானத்தில் விமானப்படையின் கார் பேரணியைப் வரவேற்று, அதன் பயணத்தை முன்னோக்கி நடத்தி செல்வார்.

இந்த பேரணி இந்தியில் "வாயு வீர் விஜேதா பேரணி" என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது "ஹிமாலயன் தண்டர்" மற்றும் "விங்ஸ் ஆஃப் க்ளோரி" கார் பேரணி போன்ற அற்புதமான சில பெயர்களையும் கொண்டுள்ளது. இதனுடைய 7000 கிலோமீட்டர் பயணத்தில் பதினாறு இடைநிறுத்தங்களைக் கொண்டுள்ளது இந்த பேரணி. பல கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுடன் 20க்கும் மேற்பட்ட உரையாடல்களும் இந்த பேரணியில் இடம்பெறும். பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ள உயர்மட்ட பிரமுகர்களால் வரவேற்கப்படும் இந்த பேரணி, இறுதியாக ஆறாவது தலாய் லாமாவின் பிறந்த இடமான தவாங்கில் அதன் கொடி இறக்கப்படும். 

மேலும் இந்த பேரணியில் மொத்தம் 52 விமான வீரர்கள், ஓட்டுநர்களாக மற்றும் இணை ஓட்டுநர்களாக கலந்துகொள்வார். பல பெண் அதிகாரிகள், விமானப்படையைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கு இந்த பேரணியில் வாகன ஓட்டிகளாக பங்கேற்கின்றனர். கார்கில் போரின் போது படைக்கு தலைமை தாங்கிய ஏர் சீப் மார்ஷல் அனில் டிப்னிஸ், ஏர் சீப் மார்ஷல் ராகேஷ் குமார் சிங் பதாரியா மற்றும் ஏர் சீப் மார்ஷல் அரூப் ராஹா ஆகியோர் பேரணிக்கு வழிகாட்டிகளாக இருப்பதை உறுதி செய்து, அவர்கள் அனைவரும் 4x4 ஜிம்னி வாகனங்களை ஓட்ட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

மாருதி சுசுகி. இந்திய விமானப்படையின் சாகசப் பிரிவு பேரணியை வழிநடத்தி ஒருங்கிணைத்து வருகிறது. ஜிபி கேப்டன் நமித் ராவத் டெல்லியில் உள்ள "ரேலி வார் ரூமை" கட்டுப்படுத்துவார், அதே நேரத்தில் விங் கமாண்டர் விஜய் பிரகாஷ் பட் முழு பேரணி பாதையிலும் வாகனங்களை கட்டுப்படுத்துவார்.

ஸ்ரீ நிதின் கட்கரியின் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (NHI DCL மூலம்) பேரணியில் ஒரு முக்கிய பங்குதாரராக உள்ளது மற்றும் போர் விமானங்களுக்கான விமானநிலையங்களை தரையிறக்குவது போல் அதன் நெடுஞ்சாலைகளை சிறப்பாகக் காண்பிக்க ஆர்வமாக உள்ளது. மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஸ்ரீ மன்சுக் மாண்டவியா தேசிய போர் நினைவுக் கொடியில் ஒரு சிறப்பு அம்சமாக இணைகிறார். மேலும் இந்த எழுச்சியூட்டும் இயக்கத்தின் ஒரு பகுதியாக இருப்பதில், தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார். மாருதி சுசுகி, IAFக்கு கடினமான மலைக்கு தகுதியான வாகனங்களின் மிகப்பெரிய சப்ளையர் ஆவார்கள். ஹிமாலயன் தண்டர் ராலிக்கு அந்நிறுவனம் 4x4 ஜிம்னிகளை வழங்கியுள்ளது. 

இந்த பேரணி நவம்பர் 13 ஆம் தேதிக்குள் டெல்லிக்கு திரும்ப வேண்டும், மேலும் தேசிய மற்றும் ராணுவத்தின் உயர்மட்ட தலைவர்கள் 'கொடி ஏற்றி' மரியாதை செய்ய அழைக்கப்பட்டுள்ளனர். 

அட்மிரல் டி கே ஜோஷி, முன்னாள் கடற்படைத் தளபதியும் தற்போது அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் லெப்டினன்ட் குவ், ஏர் மார்ஷல் பி.டி.ஜெயல், உத்தரகாண்ட் போர் நினைவகத்தின் பிரிக் ஆர்.எஸ். ராவத், நினைவிடத்தின் புரவலர் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மற்றும் முன்னாள் எம்.பி தருண் விஜய் (தலைவர்) ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ள நிலையில், விமானப்படைத் தளபதியாக இருந்து பதவி விலகும் விமானப்படைத் தளபதி வி.ஆர். சௌதாரிக்கு நன்றி தெரிவித்தனர். 

மற்றும் புதிய ஏர் சீஃப் மார்ஷலாக பதவி ஏற்கும் ஏ பி சிங்கிற்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய விமானப்படை கார் பேரணி என இதை வல்லுநர்கள் அழைக்கும் வகையில், ஆயுதப்படைகளின் புகழ்பெற்ற வரலாற்றின் செய்தியை பரப்புவதற்கும் இளைஞர்களை வானத்தின் மாஸ்டர்களாக ஆவதற்கு அழைப்பதற்கும் இலக்காக கொண்டுள்ளது இந்த பேரணி..

இந்தியாவில் 80 கோடி மக்களுக்கு இலவசமாக ரேஷன்! பிச்சை எடுக்கும் பாகிஸ்தான்! முதல்வர் யோகி ஆதித்யநாத்!

click me!