"தரமான கதையா செலக்ட் பண்றாப்லபா" மணிகண்டனின் அடுத்த அவதாரம் - STR வெளியிட்ட டக்கர் போஸ்டர்!

First Published | Sep 28, 2024, 10:30 PM IST

Actor Manikandan : பிரபல நடிகர் மணிகண்டனின் அடுத்த பட அறிவிப்பு இப்பொது வெளியாகியுள்ளது. படத்தின் போஸ்டரே, கதையை தெளிவாக விளக்கியுள்ளது.

Actor Manikandan

சென்னையில் கடந்த 1987ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி பிறந்த நடிகர் தான் மணிகண்டன். சிறு வயது முதலே திரைப்படங்களின் மீதான தனது ஆர்வத்தின் காரணமாக கலை உலகில் பயணிக்க தன்னாலான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வந்தார் அவர். பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான ரியாலிட்டி காமெடி ஷோவில் பங்கேற்ற அவர், இறுதிப்போட்டியில் இரண்டாவது இடம் பிடித்து அசத்தினார். பின் பிரபல பண்பலை ஒன்றில் ரேடியோ ஜாக்கியாக தனது பயணத்தை தொடங்கினார். நடிப்பு என்பதை தாண்டி வசனம் எழுதுவதிலும் திரைக்கதை எழுதுவதிலும் ஆர்வம் கொண்ட மணிகண்டன் கடந்த 2013ம் வெளியான பீட்ஸா 2 படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

"மர்மயோகி முதல் தேவர் மகன் 2 வரை" கமல் கடைசி நொடியில் கைவிட்ட டாப் 4 டக்கர் படங்கள்!

Raja Kannu

தொடர்ச்சியாக தமிழில் நல்ல பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்த மணிகண்டனுக்கு திருப்பு முனையாக அமைந்தது கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி இயக்கத்தில் வெளியான "விக்ரம் வேதா" என்ற திரைப்படம் தான். இந்த திரைப்படத்திற்கு வசனகர்த்தாவாகவும் செயல்பட்டது மணிகண்டன் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்த மணிகண்டனுக்கு சிறந்த வசனகர்த்தாவிற்கான விருது "விக்ரம் வேதா" திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.

Tap to resize

Vikram Vedha

தொடர்ச்சியாக நல்ல பல படங்களில் நடித்து வந்த மணிகண்டன், காலா திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகனாக நடித்திருந்தார். ஆனால் அந்த திரைப்படத்தையும் தாண்டி கடந்த 2021 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வெளியான சூர்யாவின் "ஜெய் பீம்" திரைப்படம் மணிகண்டனுக்கு ஒரு பிரேக்கிங் பாய்ண்டாக அமைந்த திரைப்படம் என்றே கூறலாம். ராஜா கண்ணு என்கின்ற அந்த கதாபாத்திரத்தில் அவ்வளவு நேர்த்தியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.

Kudumbasthan

கடந்து சில ஆண்டுகளாகவே நல்ல பல படங்களில் நடித்துவரும் மணிகண்டன், லவ்வர் மற்றும் குட் நைட் ஆகிய இரு திரைப்படங்களின் நாயகனாக நடித்திருந்தார். தளபதி விஜயின் கோட் திரைப்படத்தில் AI தொழில்நுட்பத்தின் மூலம் வந்த விஜயகாந்திற்கு குரல் கொடுத்தது மணிகண்டன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் மணிகண்டன் தனது அடுத்த திரைப்பட பணிகளை துவங்கியிருக்கிறார். ராஜேஸ்வர் களிசாமி என்பவருடைய இயக்கத்தில் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் உருவாகவுள்ள "குடும்பஸ்தன்" என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அவர் நடிக்க உள்ளார். இன்று அந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்புகளை பெற்று வருகிறது. பிரபல நடிகர் சிலம்பரசன் அந்த போஸ்டரை வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

"டார்ச்சர் பண்ணது அவங்க தான்".. புஷ்பா பட இயக்குனரை சப்போர்டுக்கு இழுக்கும் ஜானி மாஸ்டர்!

Latest Videos

click me!