Dance Master Jani
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கேரள திரை உலகை அதிர வைத்தது ஹேமா என்கின்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழு வெளியிட்ட அறிக்கை. அதாவது கேரளா திரையுலகில் நடிகைகளுக்கு பெரிய அளவில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்படுவதாக சுமார் 220 பக்கம் கொண்ட அறிக்கையை நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டி, அம்மாநில முதல்வரிடமே நேரடியாக அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து சுமார் பத்துக்கும் மேற்பட்ட நடிகைகள், கேரள திரையுலகின் முன்னணி இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்ததும் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக ரேவதி சம்பத் என்கின்ற நடிகை தான் முதல் முதலில் இந்த பிரச்சனையில் தன்னுடைய கருத்தை வெளியிட்டார். பிரபல நடிகர் சித்திக் மீது பாலியல் புகார் அளித்த அவர், பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் ரியாஸ் காணும் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருப்பதாக பரபரப்பு தகவல் ஒன்றை கொடுத்தார்.
"ஆண்டவரே".. அமெரிக்கா போனது இதற்குத்தானா? AI-யின் உதவியால் மீண்டு வருகிறதா மருதநாயகம்?
Hema Committee
மேலும் இந்த விஷயத்தில் தொடர்ச்சியாக பேசிய மற்றொரு நடிகை, மலையாள திரை உலகின் நான்கு முக்கிய நடிகர்களின் மீது பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்தார் .குறிப்பாக பிரபல நடிகர் ஜெயசூர்யா ஒரு ஷூட்டிங்கில் இருந்த பொழுது, கழிவறைக்கு சென்று விட்டு திரும்பிய தன்னை, பின்னால் இருந்து கட்டி அணைத்து முத்தமிட்டதாகவும். தன்னிடம் அத்துமீறியதாகவும் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது இந்த புகார்கள் குறித்தான விசாரணைகள் தீவிரமாக நடந்து வருவதும் அனைவரும் அறிந்ததே.
இந்த சூழலில் நான் தமிழ் திரை உலகில் இது போல பல விஷயங்கள் நடைபெற்று வருவதாகவும், அதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க நடிகர் சங்கம் தயாராக இருப்பதாகவும் விஷால் கூறினார். மேலும் நடிகைகளுக்கு அல்லது சினிமாவில் பணியாற்றும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களின் குற்றங்கள் நிரூபணமானால், அவர்கள் ஐந்து ஆண்டுகள் திரைப்படங்களில் நடிக்க தடை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த விவகாரத்தில் நடிகை ராதிகா சரத்குமார் வெளியிட்ட சில தகவல்கள் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Revathi Sampath
குறிப்பாக மலையாள திரை உலகில் நடிகைகள் பயன்படுத்தும் கேரவங்களில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டு அவர்கள் உடைமாற்றும் விஷயங்கள் வரை அனைத்தும் அதில் பதிவாக்கப்படுகிறது என்று கூறி திடுக்கிட வைத்தார். இப்படி கேரளா மற்றும் தமிழ்நாடு என்று இந்த பாலியல் வழக்குகள் தொடர்ந்த நிலையில், பிரபல நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் மீது அவருடன் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இது தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு ஜானகி மாஸ்டர் காவல்துறையினளால் கைது செய்யப்பட்டு தற்பொழுது விசாரணையில் அவர் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கணவர் ஜானியின் கைது குறித்து பேசிய அவரது மனைவி, அந்த பெண் இத்தனை ஆண்டுகள் கழித்து ஜானி மீது புகார் அளிக்க என்ன காரணம்? எந்தவித ஆதாரமும் இல்லாமல் அவர் பேசுவது முறையா? இவை அனைத்தும் ஜானி மாஸ்டரின் வளர்ச்சியின் மீது பொறாமை கொண்ட சிலர் செய்வதுதான் என்று மிகவும் காட்டமாக பேசியிருந்தார்.
Jani Master
இந்நிலையில் நடன இயக்குனர் ஜானகி மாஸ்டர் வெளியிட்ட ஒரு அறிக்கையில் "அந்த பெண் தன்னை பலமுறை சந்தித்து, தனக்கு ஒரு வாய்ப்பு தருமாறு கேட்டதாகவும். அவர் மீது பரிதாபப்பட்டு மட்டுமே தன்னுடன் உதவி இயக்குனராக பணியாற்ற அவருக்கு அனுமதி அளித்ததாகவும் கூறியிருக்கிறார். மேலும் புஷ்பா இடத்தில் பணிபுரியும் பொழுது, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண் வற்புறுத்தியதாகவும், ஒரு கட்டத்தில் தன்னை அந்த பெண் டார்ச்சர் செய்து மிரட்டத் தொடங்கியதாகவும் கூறியிருக்கிறார் நடன இயக்குனர் ஜானி. மேலும் இந்த விவகாரம் அனைத்தும் புஷ்பா பட இயக்குனர் சுகுமாருக்கு தெரியும் என்றும், நாங்கள் இருவரும் இணைந்து தான் அந்த பெண்ணுக்கு புத்திமதி கூறியதாகவும் தெரிவித்துள்ளார் அவர்.
திருப்பதி லட்டு விவகாரம்.. "தலைவர்" சொன்ன நச் பதில் - அதை முன்பே கணித்த மாறன்!