சில தினங்களுக்கு முன்பு கூட தனது "மெய்யழகன்" திரைப்பட பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டிருந்த நடிகர் கார்த்திக். ஹைதராபாத்தில் நடந்த விழாவில் பங்கேற்றார். அப்போது அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நடிகர் கார்த்தியை நோக்கி "உங்களுக்கு லட்டு வேண்டுமா" என்று கேட்க, ஹைதராபாத்தில் லட்டுவைப்பற்றி பேசக்கூடாது. மிகவும் சென்சிட்டுவான டாபிக் அது என்று கொஞ்சம் சிரித்துக் கொண்டே பேசி இருந்தார்.
அவருடைய அந்த வீடியோ பெரிய அளவில் வைரலான நிலையில், உடனடியாக பவன் கல்யாண் அதற்கு கடும் கோபமாக ஒரு பதிலை கூறியிருந்தார். அதில் நடிகர்கள் பொதுவெளியில் சனாதனம் பற்றி பேசும்பொழுது ஒன்றுக்கு நூறு முறை நன்கு யோசித்து பேச வேண்டும். அதுதான் அனைவருக்கும் நல்லது என்று கூறியிருந்தார். ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாணின் இந்த பதிவிற்கு உடனே பதிலளித்த நடிகர் கார்த்திக். அன்று நான் பேசியது தவறாக இருந்தால் தன்னை மன்னிக்க வேண்டும் என்றும், திருப்பதி ஏழுமலையானின் பக்தனாக மரபுகளை மதிப்பவன் நான் என்றும் கூறியிருந்தார்.