தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள ஸ்ரீதேவி... படக்குழுவினரை மிகவும் சிரம படுத்த கூடிய நடிகை என்றும், சில நடிகர், நடிகைகளிடம் மிகவும் திமிராக நடந்து கொள்பவர் என கூறப்படுகிறது.
குறிப்பாக சில நடிகைகளை ஸ்ரீதேவி வயதில் மூத்தவராக இருந்தால் கூட மதிக்க மாட்டாராம். இதில் முதலில் சொல்ல வேண்டிய பெயர் ஜெயப்பிரதா. அவரிடம் ஸ்ரீதேவி எந்த நட்புறவும் வைத்துக் கொள்ளவில்லையாம். ஒரு சந்தர்ப்பத்தில் ஜெயப்பிரதா, ஸ்ரீதேவியை மிகவும் திமிர் பிடித்த நடிகை என கூறியுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் மட்டுமே ஸ்ரீதேவி ஜெயப்ரதாவிடம் பேசுவாராம்.