
இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் (செப்டம்பர் 27) அதாவது நேற்று வெளியான திரைப்படம் 'தேவரா: பாகம் 1'. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் 2022-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக இருந்தாலும், இந்த படத்தில் ராம் சரணுடன் இணைந்து நடித்திருந்தார் ஜூனியர் என்டிஆர். எனவே இது மல்டி ஸ்டார் படமாகவே கருதப்பட்ட நிலையில், சுமார் 6 வருடங்களுக்கு பின்னர் ஜூனியர் என்டிஆர் தனி ஹீரோவாக நடித்த 'தேவாரா' திரைப்படம் வெளியானது. என்டிஆர் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியானது.
ஜூனியர் என்டிஆர் இரட்டை வேடங்களில் நடித்திருந்த இந்த படம் பக்கா ஆக்ஷன் திரைப்படமாக வெளியான நிலையில், இந்த படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்திருந்தார். அதே போல் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் சைப் அலிகான் நடித்திருந்தார். இவர்களை தவிர, ஸ்ருதி மராத்தி, கலையரசன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்திருந்தனர் சுதாகர் மிக்கிலினேனி, கோசராஜு ஹரி கிருஷ்ணா மற்றும் நந்தமுரி கல்யாண் ராம் ஆகியோர்.
மீண்டும் கார் ரேஸில் கலந்து கொள்ளும் அஜித்! வெறித்தனமாக தயாராகும் வைரல் போட்டோஸ்!
அனிரூத் இசையில் 'தேவாரா' படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே, ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டது. அதே போல் படத்தை பார்த்த ரசிகர்கள் அனிரூத் BGM-ல் மிரட்டி விட்டுள்ளதாகவும், படத்தின் முதுகெலும்பாக இசை உள்ளதாகவும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே பாலிவுட் திரையுலகில், ஜவான் படத்தின் மூலம் இசையமைப்பாளராக நுழைந்து.... முதல் படத்திலேயே பாலிவுட் ரசிகர்களை கவர்ந்த அனிருத் 'தேவாரா' திரைப்படத்தின் மூலம், தெலுங்கு ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.
ஒரு தரப்பினர் 'தேவாரா' படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கூறி வந்தாலும், இன்னும் சிலர் நெகட்டிவ் விமர்சனங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருவதையும் பார்க்க முடிகிறது. நேற்றைய தினம், ஹைதராபாத்தில் உள்ள பிரபல திரையரங்கில்... ஜூனியர் என்டிஆரின் பிரமாண்ட கட்டவுட்டை 'தேவாரா' படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்கிற காரணத்தால் சில ரசிகர்கள் கொளுத்தியதாகவும் கூறப்பட்டது. இது போன்ற சர்ச்சைகள் படத்தை சுற்றி போய்க்கொண்டிருந்தாலும், 'தேவாரா' இந்த ஆண்டின் சிறந்த ஓப்பனிங்கை பெற்றுள்ளது.
அதன்படி முதல் நாளில் இந்த படம் அனைத்து இந்திய மொழிகளில் மட்டும், மொத்தமாக ரூ.77 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. Sacnilk.com இந்த படத்தின் வசூல் குறித்து வெளியிட்டுள்ள தகவலில், தெலுங்கில் ₹68.6 கோடி தேவாரா வசூல் செய்துள்ளதாகவும், இந்தியில் ₹7 கோடியும், கன்னட மொழியில் ₹30 லட்சம் வசூலும், தமிழில் ₹80 லட்சமும், மலையாளத்தில் ₹30 லட்சம் வசூலையும் குவித்துள்ளது. குறிப்பாக ஹிந்தியில் 7 கோடி வசூல் செய்துள்ளது ரசிகர்களையே பிரமிக்க வைத்துள்ளது. தமிழிலும் 80 லட்சம் என்பது டீசெண்டான வசூலாகவே பார்க்கப்படுகிறது.
'தேவாரா' திரைப்படம் இந்தியாவில் மட்டும் முதல் நாளில் ரூபாய் 77 கோடி வசூலித்துள்ளதால்... இந்த வருடத்தில் இந்தியாவில் அதிக வசூல் செய்த இரண்டாவது படம் என்கிற சாதனையை செய்துள்ளது. முதல் இடத்தில் பிரபாஸின் கல்கி 2898 AD திரைப்படம் உள்ளது. இப்படம் முதல் நாளில் ₹95 கோடி வசூல் செய்து, 2024-ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் வசூல் செய்த படமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து இரண்டாவது இடத்தில், ஸ்ட்ரீ 2 திரைப்படம் இந்த ஆண்டு, ₹60 கோடி வசூல் செய்த படமாக இருந்தது. ஆனால் தற்போது 'தேவாரா' ரூபாய் 77 கோடி வசூல் செய்துள்ளதால், ஸ்ட்ரீ 2 மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்திய அளவில் பிக் ஓப்பனிங்கை 'தேவாரா' கண்டுள்ளதால், என்டிஆர் ரசிகர்கள் இந்த விஷயத்தை கொண்டாடி வந்தாலும், தளபதி விஜய்யின் லியோ பட வசூலை முறியடிக்க 'தேவாரா' தவறி விட்டது என என்பது உங்களுக்கு தெரியுமா?. கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான... 'லியோ' திரைப்படம் முதல் நாளில், இந்திய மொழிகளில் மட்டும் ரூபாய் 79 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.