மீண்டும் கார் ரேஸில் கலந்து கொள்ளும் அஜித்! வெறித்தனமாக தயாராகும் வைரல் போட்டோஸ்!

First Published | Sep 28, 2024, 11:32 AM IST

தல அஜித் அடுத்தடுத்து, திரைப்படங்களில் பிசியாக இருந்தாலும் கூட தற்போது ஐரோப்பிய ஜிடி4 சாம்பியன்ஷிப் மோட்டார் ரேஸிங் போட்டியில் பங்கேற்க தயாராகி வருகிறார் இதுகுறித்த போட்டோஸ் சிலவற்றை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள நிலையில் அவை வைரலாகி வருகிறது.
 

Ajith Car Race

தமிழ் சினிமாவில், 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கும் அஜித்... தன்னுடைய இளம் வயதில் இருந்தே, நடிப்பை தாண்டி கார் ரேஸ் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் காட்டி வருபவர் என்பது அனைவரும் அறிந்ததே. ஏற்கனவே அஜித் சில ரிஸ்க்கான ஸ்டண்ட் காட்சிகளில் ஈடுபட்டதால் முழங்கால், இடுப்பு, கை, தோள்பட்டை போன்ற பல இடங்களில் அடிபட்டு ஆபரேஷன் செய்யப்பட்டிருந்தாலும், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தன்னுடைய ஃபேஷனில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஐரோப்பிய ஜிடி4 சாம்பியன்ஷிப் மோட்டார் ரேஸிங் போட்டியில் அஜித் கலந்து கொள்ள உள்ளார்.

Gt4 European Championship

இதற்காக ஆயத்தமாகி வரும் அஜித் துபாயில் பயிற்சி பெரும் புகைப்படங்கள் சிலவற்றை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தற்போது தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். ஏற்கனவே இதுகுறித்து அஜித்தின் நண்பரும்,கார் ரேஸ் வீரருமான, நரேன் கார்த்திகேயன் கடந்த வாரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். “வரும் 2025ஆம் ஆண்டு என்னுடைய நண்பர் அஜித், மோட்டார் ஸ்போர்ட்ஸின் ஜிடி4 ரேஸிங் பிரிவில் கம்பேக் கொடுக்க கடுமையாக உழைத்து வருவதை அறிந்தேன். அவர் மிகவும் தனித்துவமான மனிதர். ரேசிங்கில் அதிக அனுபவம் இல்லை என்றாலும்... அவர் ஒரு அதிவேகமான ரேசர், என கூறி இருந்தார். அதே போல் கடந்த 2010ஆம் ஆண்டு, அஜித் மொரோக்கோவில் கலந்து கொண்ட FIA F2 பிரிவில் கலந்து கொண்ட கார் ரேஸ் குறித்தும் குறிப்பிட்டிருந்தார்.

தலைவர் பட வசூல் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய கார்த்தியின் 'மெய்யழகன்'! முதல் நாள் வசூல் விவரம்!

Tap to resize

Ajith Training In Dhubai

அஜித், ஆரம்பத்தில் பைக் ரேஸில் கவனம் செலுத்தினாலும்... பின்னர் கார் ரேஸில் கவனம் செலுத்த துவங்கினார். சினிமாவை தாண்டி பல விஷயங்களில் ரியல் ஹீரோவாக பார்க்கப்படும் அஜித்.. கடந்த சில வருடங்களாக கார் ரேஸில் இருந்து ஒதுக்கி இருந்தாலும், பைக் மூலம் உலக சுற்றி வரும் நிகழ்வில் ஈடுபட்டார். அதே போல் ஏரோ மாடலிங், ரிப்பில் ஷூட்டிங், போட்டோ கிராஃபி, உள்ளிட்ட பல விஷயங்கங்களில் ஆர்வம் காட்டி வந்தார். தற்போது அஜித் நீண்ட இடைவெளிக்கு பின்னர் 2025  ஐரோப்பிய ஜிடி4 சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க உள்ளது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் உள்ளது.

Ajith Viral Photos

இந்த தகவலை தற்போது இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் ஃபெடரேஷன் தெரிவித்துள்ளது. மேலும் அஜித் அல்லது அவரது பிரதிநிதிகள் மற்றும் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய அணிகளுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அஜித் வரவிருக்கும் ஐரோப்பிய பந்தய சீசனுக்கு உற்சாகமாக தயாராகி வரும் சில புகைப்படங்கள் அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு, லைக்குகளை குவித்து வருகிறது.

அஜித் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், 'விடாமுயற்சி' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக, திரிஷா கிருஷ்ணன் நடித்துள்ளார்.மேலும்  அர்ஜுன் சர்ஜா, ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி, படத்தில் நடித்துள்ளார் இந்த படம் பொங்கலை குறிவைத்து ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Bigg Boss Tamil Season 8: பிக்பாஸ் நிகழ்ச்சியால் விஜய் டிவி-யின் 4 முத்தான சீரியல்கள் முடிவுக்கு வருகிறதா?
 

Latest Videos

click me!