- Home
- Cinema
- Bigg Boss Tamil Season 8: பிக்பாஸ் நிகழ்ச்சியால் விஜய் டிவி-யின் 4 முத்தான சீரியல்கள் முடிவுக்கு வருகிறதா?
Bigg Boss Tamil Season 8: பிக்பாஸ் நிகழ்ச்சியால் விஜய் டிவி-யின் 4 முத்தான சீரியல்கள் முடிவுக்கு வருகிறதா?
விஜய் டிவி தொலைக்காட்சியில் அக்டோபர் 6-ஆம் தேதி முதல், விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ள நிலையில், 3 சீரியல்களை கூடிய விரைவில் முடிக்க விஜய் டிவி திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

Vijay tv Serial
எப்படி சன் டிவி சீரியல்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறதோ... அதே போல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்த்து ரசிக்கவும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இதன் காரணமாகவே TRP ரேட்டிங் மோதல் இந்த இரண்டு சேனல் இடையே நடக்கிறது. விஜய் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ள, கடந்த 3 மாதத்தில் மட்டும் சன் டிவியில் மருமகள், மூன்று முடிச்சு, மல்லி என மூன்று சீரியல்கள் துவங்கப்பட்டது. இன்னும் சில சீரியல்களை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டு புதிய சீரியல்களை ஒளிபரப்பாக்க சன் டிவி முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, தற்போது... சன் டிவிக்கு டஃப் கொடுக்கும் விதத்தில், விஜய் டிவியின் முக்கிய ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சி, அக்டோபர் 6-ஆம் தேதி முதல் துவங்க உள்ள நிலையில், 4 சீரியலை முடிவுக்கு கொண்டு வரவும், விஜய் டிவி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த சீரியல்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
Baakiyalakshmi
பாக்கிய லட்சுமி:
ராமமூர்த்தி கதாபாத்திரம் இறந்ததாக காட்டப்பட்டதில் இருந்தே TRP ரேட்டிங்கில் மிகவும் பின் தங்கிவிட்ட, பாக்கிய லட்சுமி சீரியல், விரைவில் முடிவுக்கு கொண்டு வரலாம் என, ஏற்கனவே சில தகவல்கள் வெளியான நிலையில், விரைவில் எண்டு கார்டு போட விஜய் டிவி தரப்பும் முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2020-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த சீரியல்... சுமார் நான்கு வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் முடிய போவதாக சில தகவல்கள் சமூக வலைத்தளத்தில் சுற்றி வந்தாலும், அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
Muthazhagu Serial
முத்தழகு:
'தேவதா அன்பந்தால ஆலயம்' என்கிற தெலுங்கு சீரியலின் ரீ-மேக்காக எடுக்கப்பட்டது தான், 'முத்தழகு சீரியல். ஆஷிஷ் சக்ரவர்த்தி ஹீரோவாக நடித்து வரும் இந்த சீரியலில், ஷோபா என்பவர் கதாநாயகியாக நடித்து வருகிறார். இரண்டாவது நாயகியாக, வைஷாலி தணிகா நடிக்கிறார். 2021-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த சீரியல், 2 வருடங்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில், தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த சீரியலை முடித்து விட்டு புதிய சீரியலை ஒளிபரப்ப விஜய் டிவி தயாராகி உள்ளது.
Panivizhum Malarvanam
பனிவிழும் மலர்வணம் :
மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாக துவங்கும் சீரியல்கள் ஏனோ, சில காரணங்களால்.. ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க தவறி விடுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு ஜூன் மாதம் துவங்கப்பட்ட 'பனிவிழும் மலர்வணம்' தொடர் TRP-யில் சுத்தமாக அவுட் ஆனதால், இந்த தொடரை சட்டு புட்டுன்னு முடிக்க விஜய் டிவி தரப்பு முடிவு செய்துள்ளதாம். ஏற்கனவே நிறைவு பகுதியை எட்டாத சில சீரியல்களை... விஜய் டிவி முடிவுக்கு கொண்டு வந்தது போல் இந்த சீரியலும் முடிக்க பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த சீரியலில் பாரதி கண்ணம்மா 2 தொடரில் நடித்து வந்த வினுஷா மற்றும் ஷில்பா ஆகியோர் கதாநாயகியாக நடித்து வருகின்றனர். சித்தார்த் குமார் மற்றும் ராயன் ஆகியோர் ஹீரோவாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Veetukku Veedu Vaasalpadi
வீட்டுக்கு வீடு வாசல்படி:
விஜய் டிவியில் கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்ட... 'வீட்டுக்கு வீடு வாசல்படி' சீரியலும், ஆரம்பத்தில் இருந்தே TRP ரேட்டிங் விஷயத்தில், கைகொடுக்காததாலும்... பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட உள்ளதாலும், முடிவுக்கு கொண்டு வர அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சீரியலில் திரவியம், ஸ்ரீதா சிவதாஸ், ஆர்த்தி சுபாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். 100 எபிசோடுகளையே எட்டியுள்ள இந்த நிலையில்... இந்த தொடர் முடியப்போவதாக கடந்த சில மாதங்களாகவே சமூக வலைத்தளத்தில் ஒரு தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.