MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இந்த மனசு தான் சார் கடவுள்! இந்தியா திரும்பியதும் ஓடி போய் வயநாடு மக்களுக்கு உதவிய நடிகர் விஜய் விஷ்வா!

இந்த மனசு தான் சார் கடவுள்! இந்தியா திரும்பியதும் ஓடி போய் வயநாடு மக்களுக்கு உதவிய நடிகர் விஜய் விஷ்வா!

நடிகர் விஜய் விஷ்வா, இந்தியாவுக்கு வந்ததும்... முதல் வேலையாக வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து, அவர்களுக்கு ஆறுதல் கூறி தன்னால் முடிந்த முடிந்த உதவிகளை செய்துள்ளார்.  

2 Min read
Author : manimegalai a
Published : Sep 27 2024, 08:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Vijay Vishwa Debut Attakathi

Vijay Vishwa Debut Attakathi

தமிழ் சினிமாவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சிறந்த அறிமுகத்தை ஏற்படுத்திய பா.ரஞ்சித்தின் 'அட்ட கத்தி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில், ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் விஜய் விஷ்வா. இதை தொடர்ந்து குட்டி புலி படத்திலும் நடித்த இவர்... 2014-ஆம் ஆண்டு 'கேரள நாட்டிளம் பெண்களுடனே' என்கிற படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், விஜய் விஷ்வாவின் நடிப்பு விமர்சன ரீதியாக பாராட்ட பட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Vijay Vishwa Movies

Vijay Vishwa Movies

இதை தொடர்ந்து டூரிங் டாக்கீஸ், சாகசம், பட்டதாரி, பிகில், போன்ற படங்களில் நடித்தார். கடந்த 2020-ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான மாயநதி மற்றும் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான சாயம் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெட்ரா நிலையில், அடுத்தடுத்து தரமான படங்களில் நடிக்க வேண்டும் என முழு வீச்சியில் செயல்பட்டு கொண்டிருக்கிறார். அதே போல் தன்னுடைய வாழ்க்கையில் பல கஷ்டங்கள் வந்தாலும், தன்னால் முடிந்தவரை பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதில் குறியாக இருக்கும் விஜய் விஷ்வா... கடந்த சில மாதங்களாக, அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கொண்டதால், கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வயநாட்டு பேரிடரில் போது இவரால் அங்கு செல்ல முடியாமல் போனது.

கைவிரித்த வாலி! 3 நாள் 100 பேரை காக்க வைத்த ஷங்கர்; இந்தியன் பட பாடலுக்கு பின்னால் இப்படி ஒரு சம்பவம்?

35
Vijay Vishwa Help:

Vijay Vishwa Help:

எனவே அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியதும், முதல் வேலையாக, கேரள மக்களை சந்தித்து... தன்னால் முடிந்த அத்தியாவசிய பொருட்கள், மற்றும் புத்தாடைகளை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,  "உறவுகளையும் உடைமைகளையும் இழந்த அவர்களது துயரத்தில் தோள் கொடுக்க…உயிரழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த, இந்த மண்ணில் கால் பதித்த போது என் கண்கள் குளமாகியது. இன்னும் தேடப்படும் சடலங்கள் எனது காலுக்கடியில் கூனாக இருக்கலாம் என்று என்னை அழைத்து சென்ற பினு என்பவர் கூறிய பின், ஒரு அடிகூட நகரமுடியாமல்  அதிர்ச்சியில் உறைந்து நின்றேன்.

45
Actor Vijay Vishwa

Actor Vijay Vishwa

இருப்பினும் மனபாரத்துடன்  கொண்டு சென்ற நிவாரண பொருட்கள், புத்தாடைகள் ,உணவு பொருட்கள் ,போர்வைகள் ,நைட்டிகள் ,வேஷ்டிகள் என இயன்றவரை இரண்டு சக்கர வாகனத்தில் கொண்டு் சென்று கொடுத்து வந்தேன். இயற்கையின் பேரழகோடு காட்சியளித்த வயநாடு, இன்று மயான அமைதியாக இருந்தது. இவ்வளவு பாதிக்கப்பட்ட பின்னரும் கூட, அந்த இடத்தில் இன்னும் தனது சொந்தங்களின் பிணங்களுக்காக  காத்திருந்த பூர்வ குடி மக்களை சந்தித்து  ஆறுதல் கூறி  பொருட்களை வழங்கிவிட்டு  நூற்றுகணக்கான பிணங்களை அடக்கம் செய்த இடத்தி்ல் அஞ்சலி செய்துவிட்டு கனத்த இதயத்துடன் ஊர் திரும்பியதாக கூறினார்.

31 வயது நடிகையுடன் டேட்டிங் பண்ணும் சிம்பு! காதலுக்கு கிரீன் சிக்னல்.. விரைவில் திருமணம்!

55
Wayanad People

Wayanad People

தன்னுடைய வீட்டின் கிரகபிரவேச நிகழ்வு மறுநாள் இருந்தும் கூட, இரவு பகல் பாராமல் என்னுடன் ஆயிரம் கிலோமீட்டர ஒரே நாளில் பயணித்த தம்பி மோகன், கார்த்தி ஆகியோருக்கு நன்றி கூறியுள்ள விஜய் விஷ்வா,  இந்த இடத்திற்க்கு வந்து உதவி செய்ய காரணமாக அமைந்த, தீப்தி குமார், பினு, சுதீப், போன்ற பலருக்கு தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image2
Ramayana First Review : பிரம்மாண்டத்தின் உச்சமா?... வெறும் பில்டப்பா? ராமாயணா முதல் விமர்சனம் வந்தாச்சு..!
Recommended image3
6 மணி காட்சி முதல் 100 ரூபாய் டிக்கெட் வரை அரசுக்கு பறந்த 13 கோரிக்கைகள்! அனுமதி கொடுப்பாரா முதல்வர்? காத்திருக்கும் திரையுலகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved