MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 31 வயது நடிகையுடன் டேட்டிங் பண்ணும் சிம்பு! காதலுக்கு கிரீன் சிக்னல்.. விரைவில் திருமணம்!

31 வயது நடிகையுடன் டேட்டிங் பண்ணும் சிம்பு! காதலுக்கு கிரீன் சிக்னல்.. விரைவில் திருமணம்!

நடிகர் சிம்பு பிரபல இளம் ஹீரோயினுடன், டேட்டிங் செய்து வருவதாகவும்... இவர்களுடைய காதலுக்கு இரண்டு குடும்பமும் தற்போது கிரீன் சிக்னல் கொடுத்து விட்டதால், விரைவில் சிம்புவின் திருமண அறிவிப்பு வெளியாகும் என ஒரு தகவல் சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது.  

3 Min read
Author : manimegalai a
| Updated : Sep 27 2024, 03:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Actor Simbu Love

Actor Simbu Love

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் டி ராஜேந்தரின் மகனான சிம்பு.  தன்னுடைய தந்தை எப்படி பன்முக திறமையாளரோ, அதேபோல் சிம்புவும் நடிகர் என்பதை தாண்டி... இயக்குனர், இசையமைப்பாளர், பாடல் ஆசிரியர், என தன்னுடைய பல திறமைகளை வெளிப்படுத்தி ரசிகர்களை எண்டெர்டெயின் செய்தவர். தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசனுடன் இணைந்து தக் லைஃப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சிம்பு, தன்னுடைய 48-ஆவதை படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் பல வருடங்களுக்கு பின்னர் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Simbu and Nayanthara Love Breakup

Simbu and Nayanthara Love Breakup

மேலும் சிம்பு திரையுலகில் பிசியாக ஒருபுறம் நடித்து வந்தாலும் கூட... 41 வயது வரை இவர் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வருவது இவருடைய குடும்பத்தினருக்கு மட்டும் அல்ல ரசிகர்களுக்கும் வருத்தமான விஷயம் தான். தன்னுடைய 19 வயதில்தமிழ் சினிமாவில் அறிமுகமான போதே, கோலிவுட் திரையுலகின் நட்சத்திர நடிகர் ஒருவரின் மகளை உருகி உருகி காதலித்த சிம்பு, பின்னர் அவருடன் பிரேக்கப் செய்து பிரிந்தார். இதற்க்கு காரணம் பிரபல இளம் ஹீரோ ஒருவர் என்றே கூறப்பட்டது. இந்த காதல் தோல்விக்கு பின்னர், வல்லவன் படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது நயன்தாரா மீது காதல்வயப்பட்டார். இவர்களின் காதல் நன்றாக சென்ற நிலையில், சில அந்தரங்க புகைப்பங்கள் வெளியாகி நயன் - சிம்பு காதலுக்குள் விரிசலை ஏற்படுத்தியது. 

ஒரு தமிழ் படத்திற்காக.. 5 தயாரிப்பாளருடன் அட்ஜஸ்ட்மென்ட்! ஸ்ருதி ஹரிஹரன் கூறிய தகவல்!

36
Simbu And Hansika Breakup

Simbu And Hansika Breakup

நயன் காதல் தோல்வியில் இருந்து மீண்ட பின்னர், வாலு படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த ஹன்சிகாவை காதலித்தார் சிம்பு. இவர்கள் இருவருமே காதல் உறவை திருமணம் வரை கொண்டுசெல்ல முடிவு செய்த நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு... மீண்டு சிம்பு காதலுக்கு எண்டு கார்டு போடும் நிலைக்கு தள்ளியது. இதன் பின்னர் த்ரிஷாவுடன்  சிம்புவுக்கு திருமணம் நடக்க உள்ளதாக கடந்த ஆண்டு கூட ஒரு தகவல் வெளியான நிலையில், பின்னர் இதில் உண்மையில்லை என்பதை சிம்பு தரப்பு அறிக்கை வெளியிட்டு தெளிவு படுத்தியது.
 

46
Simbu And Trisha Marriage Rumour

Simbu And Trisha Marriage Rumour

சிம்புவின் தங்கை - தம்பி இருவருக்குமே திருமணமாகி குழந்தை குட்டி என அவர்கள் செட்டில் ஆகிவிட்டதால், எப்படியும் சிம்புவுக்கு முடிந்தவரை சீக்கிரம் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என டி ராஜேந்தர் மற்றும் உஷா டி ராஜேந்தர் ஆகியோர், சிம்புவுக்கு பிடித்த மாதிரி ஒரு பெண்ணை வலை வீசி தேடிக் கொண்டிருக்கின்றனர். தங்களுடைய சொந்த பந்தத்தில் பெண்ணுக்காக இவர்கள் அணுகிய போது, நடிகர் என்பதாலும்... ஜாதகம் பொருந்தி வராததாலும் சில திருமண பேச்சுகள் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.  அதே நேரம் டி ராஜேந்தர், தன்னுடைய மகனுக்கு பிடித்த பெண்ணை தான் அவர் திருமணம் செய்து கொள்வார் என்பதில் உறுதியாக உள்ளார். எனவே கண்டிப்பாக சிம்புவுக்கு காதல் திருமணம் தான் என்பதை டி ராஜேந்தர் நாசுக்காக பல பேட்டிகளில் வெளிப்படுத்தியுள்ளார்.

ஜூனியர் என்டிஆரின்... 'தேவாரா' தேறுமா? தேறாதா? விமர்சனம்!

56
Simbu Dating With Nidhi Agarwal

Simbu Dating With Nidhi Agarwal

இது ஒருபுறம் இருக்க, நடிகர் சிம்பு 31 வயது இளம் நடிகையுடன் டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு, சிம்பு - சுசீந்திரன் கூட்டணியில் வெளியான திரைப்படம் 'ஈஸ்வரன்'. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடித்திருந்தார். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த போதே, நிதி அகர்வாலிடம் சிம்பு தன்னை மாமா என கூப்பிட வேண்டும் என கட்டாயப்படுத்தியதாகவும், இருவருக்கும் இடையே ஒரு காதல் ட்ராக் ஓடுவதாக கூறப்பட்டது. பின்னர் அந்த தகவல், அப்படியே காற்றோடு கரைந்த நிலையில்... மீண்டும் நிதி அகர்வால் மற்றும் சிம்பு குறித்த காதல் கிசுகிசு திரை உலகில் வட்டமிட துவங்கியுள்ளது.
 

66
Nidhi Agarwal:

Nidhi Agarwal:

அதன்படி, சிம்புவும் நிதி அகர்வாலும், டேட்டிங் செய்து வருவதாகவும்... இவர்களுடைய காதலுக்கு சிம்பு பெற்றோர் மற்றும் நிதி அகர்வாலின் பெற்றோர் கிரீன் சிக்னல் தெரிவித்துள்ள நிலையில், கூடிய விரைவில் சிம்பு - நிதி அகர்வால் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. இந்த தகவல் சிம்புவின் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது ஒருபுறம் இருந்தாலும், இந்ததகவலாவது உண்மையாகுமா அல்லது வழக்கம்போல் வதந்தியாக மாறிவிடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கார்த்தி - அரவிந்த்சாமி காம்போ ரசிகர்களை கவர்ந்ததா? 'மெய்யழகன்' பட விமர்சனம்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ஹன்சிகா மோத்வானி
நயன்தாரா
திரிஷா
தக் லைஃப்
கமல்ஹாசன்
 
4th T20 • NZ vs IND 2026
Live
NZNZ
(20.0 ov)259/7
INDIND
(5.1 ov)52/3
IND need 208 runs in 89 balls
Schedule ›
3rd TEST • SA vs AUS
Live
SASA
(62.5 ov) 329 & 171/4
AUSAUS
429
Day 4 - Session 1
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved