ஒரு தமிழ் படத்திற்காக.. 5 தயாரிப்பாளருடன் அட்ஜஸ்ட்மென்ட்! ஸ்ருதி ஹரிஹரன் கூறிய தகவல்!
ஒரு தமிழ் படத்தில் நடிக்க 5 தயாரிப்பாளர்களுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என, தமிழ் பட தயாரிப்பாளர் ஒருவர் கூறியதாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Sruthi Hariharan
தமிழில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான, நடிகை ஸ்ருதி ஹரிஹரன்... கடந்த 4 வருடங்களுக்கு முன்பு, தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து, தற்போது வெளிப்படுத்தியுள்ள தகவல் தென்னிந்திய திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவை சேர்ந்த நடிகையும், தயாரிப்பாளருமான ஸ்ருதி ஹரிஹரன்.. கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படமான 'சினிமா கம்பெனி' என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து கன்னடத்தில் லூசியா, தயோதிரி, சாவாரி 2 போன்ற படங்களில் நடித்தார். மேலும் தமிழில் 'நெருங்கி வா முத்தமிடாதே', 'நிலா', 'நிபுணன்', 'சோலோ', போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள ஸ்ருதி, தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர், 'தி வெர்டிக்ட்' என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கூடிய விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.
Sruthi Hariharan
கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ருதி ஹரிஹரன், மீ டூ சர்ச்சை... தென்னிந்திய திரையுலகில் பற்றி எறிந்த சமயத்தில், 'நிபுணன்' படத்தில் நடித்த போது, நடிகர் அர்ஜுன் சர்ஜா தன்னை கட்டிப்பிடித்ததாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இது குறித்து காவல் துறையிலும் புகார் கொடுக்கப்பட்ட நிலையில், நீதிமன்றம் வரை சென்ற இந்த வழக்கு, பின்னர் உரிய ஆதாரங்களுடன் அர்ஜுன் சர்ஜா மீதான புகார் நிரூபிக்கப்படாத காரணத்தால், தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது 5 தமிழ் பட தயாரிப்பாளர்கள் தனக்கு வலை விரித்ததாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
கார்த்தி - அரவிந்த்சாமி காம்போ ரசிகர்களை கவர்ந்ததா? 'மெய்யழகன்' பட விமர்சனம்!
கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு, இந்த சம்பவம் நடந்ததாக தெரிவித்துள்ளார் ஸ்ருதி. ஒரு முன்னணி தமிழ் தயாரிப்பாளர் தன்னுடைய கன்னட படத்தின் உரிமையை வாங்கி, தன்னை தொடர்பு கொண்டு அந்த படத்தின் தமிழ் பதிப்பில் தன்னை கதாநாயகியாக நடிக்க வைக்க விரும்புவதாக கூறினார். அவர் எனக்கு கொடுத்த ஹீரோயின் வாய்ப்பு என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பின்னர் இந்த படத்தில் மொத்தம் ஐந்து தயாரிப்பாளர்கள் இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் விரும்பும்போதெல்லாம் நான் அவர்களுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என நிபந்தனை ஒன்றையும் விதித்தார். அதற்கு நான் மிகவும் கோபமாக, இது போன்ற எண்ணத்துடன் என்னை அணுகினால்... என்னுடைய செருப்பின் சக்தி என்ன என்பதை நீங்கள் பார்க்க வேண்டி இருக்கும் என கூறினேன். இந்த சம்பவத்திற்கு பின்னர் தமிழ் சினிமாவில் எனக்கு வரும் வாய்ப்புகள் குறைந்துவிட்டன. மேலும் எந்த ஒரு பின் விளைவாக இருந்தாலும், தவறான விஷயங்களுக்கு பெண்கள் கண்டிப்பாக NO சொல்லும் தைரியம் இருக்க வேண்டும் என ஸ்ருதி தெரிவித்துள்ளார்.
Sruthi Hariharan
கேரளாவில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கைக்கு பின்னர், பல நடிகைகள் தங்களுக்கு திரை உலகின் மறைவில் நடந்த அநீதிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நிலையில் குற்றங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நிலையில், நடிகை ஸ்ருதி ஹரிஹரனும் தன்னுடைய பங்கிற்கு கொள்ளுதி போட்டுள்ளார். தமிழ் பட தயாரிப்பாளர்கள் பெயர் இந்த சம்பவத்தில் அடிப்படுவதால், கோலிவுட் திரையுலகில் இந்த சம்பவம் பேசு பொருளாக மாறியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.