MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தலைவர் பட வசூல் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய கார்த்தியின் 'மெய்யழகன்'! முதல் நாள் வசூல் விவரம்!

தலைவர் பட வசூல் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய கார்த்தியின் 'மெய்யழகன்'! முதல் நாள் வசூல் விவரம்!

நடிகர் கார்த்தி நடிப்பில், நேற்று வெளியான 'மெய்யழகன்' திரைப்படம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லால் சலாம் படத்தின் முதல் நாள் வசூலை சல்லி சல்லியாக நொறுக்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Sep 28 2024, 09:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Meiyazhagan movie Good opening

Meiyazhagan movie Good opening

தமிழகத்தில், ஒவ்வொரு வாரமும் 4 படங்களுக்கு மிகாமல் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வரும் நிலையில், இந்த வாரம் மட்டும், சுமார் 6 படங்கள் ரிலீஸ் ஆனது. இதில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான பான் இந்தியா படமான தேவாரா மற்றும் கார்த்தி நடிப்பில் வெளியான மெய்யழகன் ஆகிய இரண்டு படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், தற்போது 'மெய்யழகன்' படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

24
Karthi And Aravind Swamy acting Meiyazhagan

Karthi And Aravind Swamy acting Meiyazhagan

நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான, ஜப்பான் திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக மாறிய நிலையில் இந்த ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் 'மெய்யழகன்'.  கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி கூட்டணியில் வெளியான இந்த படத்தை, 96 படத்தை இயக்கிய இயக்குனர் சி பிரேம் குமார் எழுதி - இயக்கியிருந்தார்.

இந்த படத்தை நடிகர் கார்த்தியின் சகோதரர் சூர்யா தன்னுடைய மனைவி ஜோதிகா உடன் இணைந்து, 2d எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். சுமார் 35 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தில், நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகை ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். அதே போல் ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஜெயப்பிரகாஷ், ஸ்ரீ ரஞ்சனி, இளவரசு, கருணாகரன், உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது.

Bigg Boss Tamil Season 8: பிக்பாஸ் நிகழ்ச்சியால் விஜய் டிவி-யின் 4 முத்தான சீரியல்கள் முடிவுக்கு வருகிறதா?

34
Meiyazhagan Movie Day 1 Box Office

Meiyazhagan Movie Day 1 Box Office

நேற்றைய தினம் படம் ரிலீஸ் ஆனதில் இருந்தே... 'மெய்யழகன்' திரைப்படம் தொடர்ந்து, ரசிகர்கள் மத்தியில்  பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வந்தது. ரசிகர்களும், நீண்ட நாட்களுக்கு பின்னர் குடும்பத்தோடு பார்க்கக் கூடிய ஒரு பீல் குட் மூவி என 'மெய்யழகன்' படத்தை பாராட்டி வந்தனர். அதேபோல் மாமன் - மச்சான் இடையே இருக்கும் பாசம், கிண்டல், நட்பு போன்றவற்றை இயக்குனர் பிரேம்குமார் அழகாக காட்டியிருந்ததாகவும் கூறப்பட்டது.

44
Meiyazhagan Beat Lal Salaam collection:

Meiyazhagan Beat Lal Salaam collection:

இந்நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'மெய்யழகன்' திரைப்படம் முதல் நாள் பாக்ஸ் ஆபிசியில் சுமார் ஐந்து கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.  இதன் மூலம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், தலைவர் நடித்த லால் சலாம் படத்தின் வசூலை 'மெய்யழகன்'  முறியடித்துள்ளது.

லால் சலாம் திரைப்படம், முதல் நாளில் 3.55 கோடி மட்டுமே வசூலித்ததாக கூறப்பட்ட நிலையில், 'மெய்யழகன்'  திரைப்படம்  ஐந்து கோடி வரை வசூலித்து கெத்து காட்டி உள்ளது. மேலும் முதல் நாளே இப்படத்திற்கு சிறந்த ஓப்பனிங் கிடைத்துள்ளதாலும், படம் பாசிட்டி விமர்சனங்களை பெற்றுக் வருவதாலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கைவிரித்த வாலி! 3 நாள் 100 பேரை காக்க வைத்த ஷங்கர்; இந்தியன் பட பாடலுக்கு பின்னால் இப்படி ஒரு சம்பவம்?
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கார்த்தி (நடிகர்)
சூர்யா

Latest Videos
Recommended Stories
Recommended image1
எதிரிகளாக இருந்த MGR - கண்ணதாசன்! ஒரே பாடலில் Friends ஆக மாறிய கதை தெரியுமா?
Recommended image2
டாக்ஸிக் படத்திற்காக யாஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Recommended image3
ஏத்திவிட்ட மீனா... குதிரைக் கொம்பாக நிற்கும் கோமதி; மனம் இறங்கினாரா பாண்டியன்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved