நடிகர் கார்த்தி நடிப்பில், நேற்று வெளியான 'மெய்யழகன்' திரைப்படம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லால் சலாம் படத்தின் முதல் நாள் வசூலை சல்லி சல்லியாக நொறுக்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில், ஒவ்வொரு வாரமும் 4 படங்களுக்கு மிகாமல் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வரும் நிலையில், இந்த வாரம் மட்டும், சுமார் 6 படங்கள் ரிலீஸ் ஆனது. இதில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான பான் இந்தியா படமான தேவாரா மற்றும் கார்த்தி நடிப்பில் வெளியான மெய்யழகன் ஆகிய இரண்டு படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், தற்போது 'மெய்யழகன்' படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
24
Karthi And Aravind Swamy acting Meiyazhagan
நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான, ஜப்பான் திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக மாறிய நிலையில் இந்த ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் 'மெய்யழகன்'. கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி கூட்டணியில் வெளியான இந்த படத்தை, 96 படத்தை இயக்கிய இயக்குனர் சி பிரேம் குமார் எழுதி - இயக்கியிருந்தார்.
இந்த படத்தை நடிகர் கார்த்தியின் சகோதரர் சூர்யா தன்னுடைய மனைவி ஜோதிகா உடன் இணைந்து, 2d எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். சுமார் 35 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தில், நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகை ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். அதே போல் ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஜெயப்பிரகாஷ், ஸ்ரீ ரஞ்சனி, இளவரசு, கருணாகரன், உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது.
நேற்றைய தினம் படம் ரிலீஸ் ஆனதில் இருந்தே... 'மெய்யழகன்' திரைப்படம் தொடர்ந்து, ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வந்தது. ரசிகர்களும், நீண்ட நாட்களுக்கு பின்னர் குடும்பத்தோடு பார்க்கக் கூடிய ஒரு பீல் குட் மூவி என 'மெய்யழகன்' படத்தை பாராட்டி வந்தனர். அதேபோல் மாமன் - மச்சான் இடையே இருக்கும் பாசம், கிண்டல், நட்பு போன்றவற்றை இயக்குனர் பிரேம்குமார் அழகாக காட்டியிருந்ததாகவும் கூறப்பட்டது.
44
Meiyazhagan Beat Lal Salaam collection:
இந்நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'மெய்யழகன்' திரைப்படம் முதல் நாள் பாக்ஸ் ஆபிசியில் சுமார் ஐந்து கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், தலைவர் நடித்த லால் சலாம் படத்தின் வசூலை 'மெய்யழகன்' முறியடித்துள்ளது.
லால் சலாம் திரைப்படம், முதல் நாளில் 3.55 கோடி மட்டுமே வசூலித்ததாக கூறப்பட்ட நிலையில், 'மெய்யழகன்' திரைப்படம் ஐந்து கோடி வரை வசூலித்து கெத்து காட்டி உள்ளது. மேலும் முதல் நாளே இப்படத்திற்கு சிறந்த ஓப்பனிங் கிடைத்துள்ளதாலும், படம் பாசிட்டி விமர்சனங்களை பெற்றுக் வருவதாலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.