ரஜினியை ஹீரோவாக்க கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை விற்ற நண்பர்! ராஜ் பகதூர் பற்றிய தகவல்கள்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின், ஹீரோ கனவை நிறைவேற்ற, அவரின் நண்பர் தனது கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை விற்றுக் கொடுத்தார் என்பது உங்களுக்கு தெரியுமா..? ரஜினியை ஹீரோவாக்கிய அந்த சாதாரண மனிதர் பற்றி பலரும் அறிந்திடாத தகவல்கள் இதோ..
Rajinikanth
ரஜினிகாந்த்.. கோலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார். இவர் தமிழ் சினிமா மட்டுமல்ல.. உலகமே அளவில் ரசிகர்கள் கொண்டாடும் ஒரு பிரபலமாக உள்ளார். அனைத்து மொழிகளிலும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட ரஜினிகாந்த், எந்த ஒரு சினிமா பின்னணியும் இன்றி தமிழ் சினிமாவில் உயர்ந்தவர். இவரின் உயர்வுக்கு அஸ்திவாரமிட்டது இவருடைய திறமை மட்டுமே. இதை தொடர்ந்து உலகமே கொண்டாடும் ரஜினிகாந்தின் உயர்வுக்கு முக்கிய காரணம் ஒரு சாதாரண மனிதர் என்றால் நம்ப முடியுமா? ரஜினியின் உற்ற நண்பர் ராஜ் பகதூர் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
Rajinikanth Is Bus Conductor:
ரஜினிகாந்த் ஒரு சாதாரண பஸ் கண்டக்டராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி.. நண்பர்களின் ஊக்கத்தால் திரையுலகில் நுழைந்து.. இன்று திரையுலகையே ஆளும் மிக பெரிய நட்சத்திரமாக மாறி உள்ளார். சுமார் 45 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் தொடர்ந்து.. ரசிகர்களை மகிழ்வித்து வரும் ரஜினிகாந்த். இந்த இடத்திற்கு வர பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. நடிக்க வேண்டும் என இவர் ஆசை பட்டபோது, யாரும் வாய்ப்புகளை இவர் கையில் கொடுத்து விடவில்லை . அதே போல் இவர் முன்னேறி வரும் போது இவரை கீழே சாய்க்க ஏவப்பட்ட அம்புகளும் ஏராளம்... அவை அனைத்தையும் முறியடித்து தான், ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் என்கிற சிம்மாசனத்தை அடைந்தார்.
Rajinikanth Friend Raj Bahadur:
அதே போல் தன்னுடைய 70 வயதை கடந்த பின்னரும், இளம் ஹீரோக்களுக்குப் போட்டியாக.. ஒரு ஆக்ஷன் ஹீரோவாகவும், வசூல் மன்னனாகவும் கலக்கி வரும் ரஜினிகாந்தின் சாதனைகள் எப்போதுமே ரசிகர்களை ஆச்சரிப்படுத்துபவை. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ரஜினியின், நடிகர் கனவை நினைவாக்க... எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி, அவரின் நபர் தனது கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை கழற்றி அப்படியே கையில் கொடுத்தாராம். அவர் வேறு யாரும் இல்லை ரஜினிகாந்த் கண்டக்டராக பணியாற்றிய பேருந்தின் டிரைவர்.. அவரது நண்பர் பகதூர் தான்.
Raj Bahadur Help:
ஆம் ரஜினிகாந்த் பெங்களூரு சிட்டி பஸ்சில் கண்டக்டராக வேலை செய்து கொண்டிருந்த போது.. மிகவும் ஸ்டைலாக இருப்பாராம். தனது ஸ்டைலால் அனைவரையும் கவர்ந்தாராம். அதனால் அவரது நண்பர்கள், சக ஊழியர்கள் அனைவரும்.. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.. ஸ்டைலா இருக்கீங்க.. .மெட்ராஸ் போய் சினிமால ட்ரை பண்ணுங்கன்னு சொன்னாங்களாம்.
ரஜினிகாந்துக்கு அறிவுரை சொன்ன.. யாரும் ரஜினிக்கு பண உதவி செய்ய முன் வரவில்லை. ஆனால் ரஜினியின் நண்பர் பகதூர்... உன் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கு. எதையும் முயற்சி செய்யாமல் இருந்தால் தான் தவறு. முயற்சித்து தோற்று போனால் கூட பரவாயில்லை என கூறி... தனது கழுத்தில் இருந்த தங்க சங்கிலியைக் கழற்றி கொடுத்து.. மெட்ராஸ் போய் நடிப்பு பற்றி படி என ஊக்குவித்துள்ளார். அந்த தங்க சங்கிலியை விற்ற பணத்தை கொண்டு தான் ரஜினிகாந்த் தன்னுடைய நடிப்பு சம்மந்தமான படிப்பை படித்தார்.
Raj bhadur untold Story:
ரஜினியின் படிக்கும் சமயங்களில்.. கையில் காசு இல்லாமல் இருந்த போது கூட, ராஜ் பகதூர் தனது சம்பளத்தில் ஒரு பகுதியை ரஜினியின் செலவுகளுக்காக அனுப்பி வைத்தாராம். ரஜினியை அவ்வப்போது ஊக்கப்படுத்தி.. சோர்வடையாமல்.. தைரியம் சொல்லி... வந்தார். ரஜினிகாந்தின் முன்னேற்றத்திற்கு அவரின் திறமையும், விடாமுயற்சியும் எப்படி ஒரு காரணமோ... அதே போல் ராஜ் பகதூர் கொடுத்த ஊக்கமும் ஒரு காரணம் தான். ராஜ் பகதூர் தற்போது வரை ரஜினிக்கு ஒரு சிறந்த நண்பராக இருந்தாலும், அன்று செய்த உதவிகளுக்கு கைமாறு எதையும் எதிர்பார்காதவர். உண்மையான நட்புக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார் ராஜ் பகதூர்.
ரஜினிக்கு அவரது வார்த்தை வேதம். அவர் சொன்னால்.. இல்லை என்று சொல்லாமல் செய்து விடுவாராம். ஆனால் ரஜினிகாந்த் தனது நண்பரைச் சந்திக்க வருடத்திற்கு ஒரு முறையாவது பெங்களூரு செல்வாராம்.. இல்லையென்றால் தனது நண்பரையும் குடும்பத்தையும் சென்னைக்கு வரச் சொல்வாராம். ரஜினி பெங்களூரு சென்றால் மட்டும் தனது நண்பருடன் சேர்ந்து.. மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்துவிட்டு வருவாராம். முன்பு அவர்கள் சந்தித்த இடத்தில் அமர்ந்து கடந்த காலத்தை நினைவு கூர்வது.. ராஜ் வீட்டில் அவர்களது அறையில் அமர்ந்து.. பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வது ரஜினிக்கு மிகவும் பிடிக்கும் என கூறப்படுகிறது.