Marudhanayagam
தமிழக சினிமா மட்டுமல்ல, இந்திய சினிமா மட்டுமல்ல, உலக சினிமாவே கண்டு வியக்கும் மாமேதை தான் உலக நாயகன் கமல்ஹாசன் என்றால் அது சற்றும் மிகையல்ல. ஒரு திரைப்படத்தை கதை ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் அணுகும் அனைத்து திறன்களும் கமலஹாசனிடம் உண்டு. காரணம் தமிழ் சினிமா என்பதை தாண்டி இந்திய சினிமாவிற்கு பல புதிய விஷயங்களை தொழில்நுட்ப ரீதியாக புகுத்தியவர் கமலஹாசன்.
பொதுவாக மிகவும் சவாலான கதை அம்சம் கொண்ட திரைப்படங்களை உருவாக்குவதில் பெரிய அளவில் ஆர்வம் கொண்டவர் கமலஹாசன். இந்த சூழலில் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் கடந்த 1997ம் ஆண்டு அவர் போட்ட விதை தான் "மருதநாயகம்" என்கின்ற படத்திற்கான அடித்தளம். அன்றைய காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராக இருந்த கருணாநிதியும், அப்போது இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் வந்திருந்த எலிசபெத்து ராணியும் ஒன்றாக இணைந்து தான் இந்த திரைப்படத்தின் பூஜையில் பங்கேற்றனர்.
திருப்பதி லட்டு விவகாரம்.. "தலைவர்" சொன்ன நச் பதில் - அதை முன்பே கணித்த மாறன்!
Queen Elizabeth
மிகப்பெரிய பொருட்ச அளவில் உலகநாயகன் கமல்ஹாசன் உருவாக்கிய படம் "மருதநாயகம்". விஷ்ணுவர்தன், சத்யராஜ், நாசர், அம்ரிஷ் பூரி, நசுருதின் ஷா உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகினர். சுமார் 27 ஆண்டுகளுக்கு முன்பு உருவாகத் தொடங்கிய இந்த திரைப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் நடிக்க உள்ளதாக அப்போது சில தகவல்கள் வெளியானதும், பின் அது மறுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
சரி யார் இந்த "மருதநாயகம்"? இந்த கதையை எடுக்க ஏன் இவ்வளவு முனைப்பு காட்டினார் கமலஹாசன் என்று தெரியுமா?.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள "கீழ்ப்பனையூர்" என்ற கிராமத்தில் கடந்த 1725ம் ஆண்டு பிறந்தவர் தான் மருதநாயகம் பிள்ளை. தொடக்க காலத்தில் கிழக்கு இந்திய கம்பெனியின் போர்படைகளுக்கு தலைவராக திகழ்ந்து வந்த இவர், ஆங்கிலேயர்களுக்காகத்தான் பல ஆண்டுகள் பணியாற்றி வந்திருக்கிறார். இளம் வயதிலேயே ஆற்காடு நவாபுகளுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் எதிராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த பாளையக்காரர்களுக்கு எதிராக செயல்பட்டுள்ளார் மருதநாயகம்.
Kamalhaasan
மேலும் மருதநாயகத்திற்கு கௌரவம் அளிக்கும் வகையில் மதுரை அவருடைய ஆட்சிக்கு வருகிறது. பின்பு ஒரு கட்டத்தில் மருதநாயகம் ஆங்கிலேயர்களுக்கு எதிராக திரும்புகிறார். அவர்களுக்கு எதிராக போர் புரிய தொடங்குகிறார். முஹம்மது யூசுப் கான் என்ற மருதநாயகம் பிள்ளை தங்களுக்கு எதிராக திரும்பிய நிலையில், 1764ம் ஆண்டு மதுரையில் வைத்து ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு தூக்கிலிட்டுக் கொள்ளப்படுகிறார் அவர்.
முதல் இரண்டு முறை அந்த தூக்கு மேடையை கதி கலங்கிய நிலையில் மூன்றாவது முறை தான் அவர் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டதாகவும். அவரது உடல் பல பாகங்களாக வெட்டப்பட்டு தஞ்சை மற்றும் திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் புதைக்கப்பட்டுள்ளதாகவும் சில கட்டுக் கதைகளும் வலம் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Kamal marudhanayagam movie
இப்படிப்பட்ட ஒரு கதையைத்தான் உலகநாயகன் கமல்ஹாசன் சுமார் 27 ஆண்டுகளுக்கு முன்பே மெகா பட்ஜெட் படமாக எடுக்க தொடங்கினார். சுமார் 30 சதவிகித பட பணிகளும் முடிந்து, அதற்கான ரெக்கார்டும் தன்னிடம் பத்திரமாக இருப்பதாக அதுகுறித்து அண்மையில் கமலஹாசன் பேசியதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரபலம் ஒருவர் பகிர்ந்த தகவலின்படி.. உலகநாயகன் கமல்ஹாசன் அமெரிக்கா சென்றது AI தொழில்நுட்பம் பற்றி படிக்கத்தான் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
ஆனால் மருதநாயகம் படத்தை மீண்டும் எடுக்க அவர் ஆர்வம் காட்டி வருவதாகவும், இயல்பாக ஆகும் செலவுகளை தவிர்க்கவே AI தொழில்நுட்பத்தை அந்த திரைப்படத்தில் பயன்படுத்த அவர் முனைப்பு காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. உண்மையில் இந்த தகவல் உலக நாயகன் கமல்ஹாசனின் ரசிகர்கள் மத்தியில் உச்சகட்ட மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்றே கூறலாம்.
ஸ்ரீதேவி மிகவும் திமிர் பிடித்தவர்! மூத்த நடிகையின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!