திரைப்படங்கள் என்று வரும் பொழுது அதில் பலவிதமான சோதனைகளை மேற்கொள்ள ஆசைப்படும். மனிதர் தான் உலகநாயகன் கமல்ஹாசன். அந்த வகையில் தன்னுடைய "ஆளவந்தான்" மற்றும் "விருமாண்டி" ஆகிய திரைப்படங்களை முடித்த பிறகு, கமல்ஹாசன் அறிவித்த திரைப்படம் தான் "மர்மயோகி". ஒருவேளை இந்த திரைப்படம் வெளியாகி இருந்தால் "தசாவதாரம்" திரைப்படத்திற்கு முன்னதாகவே இது வெளியாகி இருந்திருக்கும். ஹிந்தி மற்றும் தமிழ் என்று இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்த திரைப்படத்தை உருவாக்க கமலஹாசன் முடிவு செய்தார்.
ஏழாம் நூற்றாண்டில் நடைபெறும் ஒரு சுவாரசியமான கதையை அலசும் கதையாக இது இருந்திருக்கும். மோகன்லால், வெங்கடேஷ், ஹேமா மாலினி, திரிஷா மற்றும் சுஷ்மிதா சென் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிப்பதாக இருந்தது. மேலும் கமலின் ராஜ் கமல் நிறுவனத்தோடு இணைந்து ரஜினியின் "குசேலன்" படத்தை தயாரித்த பிரமிட் சைமிரா நிறுவனம் இந்த படத்தை தயாரிப்பதாக இருந்த நிலையில் தான், குசேலன் படத்தால் ஏற்பட்ட நஷ்டம், பிரமிட் சைமிரா நிறுவனத்தை மர்மயோகியில் இருந்து விலக வைத்தது. பின் அப்படத்தில் இருந்து உலகநாயகன் கமல்ஹாசனும் விலகி தன்னுடைய உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தில் ஆர்வம் காட்ட தொடங்கினார்.
"ஆண்டவரே".. அமெரிக்கா போனது இதற்குத்தானா? AI-யின் உதவியால் மீண்டு வருகிறதா மருதநாயகம்?