ஆனால், இந்திய ஜாம்பவான்கள் அதற்கு வழி கொடுக்கவில்லை. சென்னையும் சேப்பாக்கம் ஸ்டேடியமும் அதற்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரிசையாக ஆட்டமிழந்தாலும், சென்னை நாயகன் ரவிச்சந்திரன் அஸ்வின் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தார். ரவீந்திர ஜடேஜாவும் ரன்கள் சேர்த்துக் கொடுத்தார்.
இதனால், இந்தியா முதல் இன்னிங்ஸில் 376 ரன்களை எட்டியது. இதில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 56 ரன்களும், ரவிச்சந்திரன் அஸ்வின் 113 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 86 ரன்களும் எடுத்தனர். பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடிய வங்கதேசம் 149 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதைத் தொடர்ந்து இந்தியா 2ஆவது இன்னிங்ஸை விளையாடியது. இதில் ரிஷப் பண்ட் 109 ரன்களும், சுப்மன் கில் 119* ரன்களும் எடுத்தனர். இறுதியாக இந்தியா 4 விக்கெட்டுகளுக்கு 287 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. மேலும், வங்கதேசத்திற்கு 514 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.