ஐபிஎல் வீரர்களுக்கு ரூ.1.05 கோடி சம்பளம் - ஜெய் ஷா அறிவிப்பு: கோலி, ரோகித், தோனி, பும்ராவுக்கு ஜாக்பாட்!

First Published Sep 28, 2024, 9:04 PM IST

IPL Match Fees, IPL 2025 Auctions: ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக, ஒவ்வொரு போட்டியிலும் விளையாடும் வீரர்களுக்கு கூடுதலாக ரூ.1.05 கோடி ஊதியமாக வழங்கப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். இந்த புதிய ஊதிய முறை ஐபிஎல் 2025 முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IPL 2025, IPL Match Feest

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக எல்லா போட்டியிலும் விளையாடும் வீரர்களுக்கு ஏல தொகையுடன் கூடுதலாக ரூ.1.05 கோடி ஊதியமாக வழங்கப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். ஒவ்வொரு போட்டியிலும் விளையாடும் வீரர்களுக்கு ஒரு போட்டிக்கு ரூ.7.5 லட்சம் வீதம் எல்லா போட்டியிலும் மொத்தமாக ரூ.1.05 கோடி வழங்கப்படும்.

IPL introduces historic match fees

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு வருடாந்திர பிசிசிஐ ஒப்பந்தம் மட்டுமல்லாமல் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கும் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களுக்கு ரூ.15 லட்சமும், ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் விளையாடும் வீரர்களுக்கு ரூ.6 லட்சமும், டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்கப்படுகிறது.

Latest Videos


IPL Match Fees, Ahead of IPL 2025 Mega Auctions

இது தவிர ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒவ்வொரு வீரர்களுக்கும் சம்பளம் வழங்கப்படுகிறது. அப்படி வழங்கப்படும் சம்பளத்துடன் தற்போது ரூ.1.05 கோடி கிடைக்கும் வகையில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஊதியமாக அறிவித்துள்ளார். இது குறித்து ஜெய் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் முறையாக சிறப்பான ஆட்டத்தை கொண்டாடும் வகையில் கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.7.5 லட்சத்தை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஒரு சீசனில் அனைத்து லீக் போட்டிகளிலும் விளையாடும் கிரிக்கெட் வீரர் அவர் ஒப்பந்தம் செய்த தொகைக்கு கூடுதலாக 1.05 கோடி பெறுவார்.

IPL Mega Auctions 2025

ஒவ்வொரு அணியும் சீசனுக்கான போட்டிக் கட்டணமாக ரூ. 12.60 கோடிகளை ஒதுக்கும். ஐபிஎல்லுக்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும் இது ஒரு புதிய சகாப்தம் என்று குறிப்பிட்டுள்ளார். ஜெய் ஷா அறிவித்துள்ளதுபடி பார்த்தால் விராட் கோலி, ரோகித் சர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா, எம்.எஸ்.தோனி, ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், ஷிவம் துபே, முகமது சிராஜ், சுப்மன் கில் ஆகியோர் எல்லா போட்டியிலும் விளையாடுகின்றனர். ஆதலால், அவர்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட தொகையை விட கூடுதலாக ரூ.1.05 கோடி கிடைக்கும்.

IPL Match Fees Rs 1.05 Crore

ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐபிஎல் ஏலத்தில் சீனியர் வீரர்கள் முதல் இளம் வீரர்கள் வரையில் ஏராளமானோர் இடம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. இதுவரையில் தக்க வைக்கப்படும் வீரர்கள் குறித்து பிசிசிஐ எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆனால், குறைந்தது 5 வீரர்கள் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!