சன் டிவிக்கு தாவிய விஜய் டிவி பிரபலம்; யார் அந்த அக்கா? - புது ரியாலிட்டி ஷோ லோடிங்
சன் டிவியில் குழந்தைகளை வைத்து புதிதாக தொடங்கப்பட்டுள்ள ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்க விஜய் டிவி பிரபலத்தை களமிறக்கி உள்ளனர்.
சன் டிவியில் குழந்தைகளை வைத்து புதிதாக தொடங்கப்பட்டுள்ள ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்க விஜய் டிவி பிரபலத்தை களமிறக்கி உள்ளனர்.
Sun TV New Reality Show Naanum Rowdy dhaan : ரியாலிட்டி ஷோ என்றாலே விஜய் டிவி தான் என்கிற நிலை படிப்படியாக மாறி வருகிறது. விஜய் டிவியில் குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் கடந்த சில ஆண்டுகளாக டாப் டிரெண்டிங்கில் இருந்தன. அதில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை உருவாக்கிய மீடியா மேசன்ஸ் கடந்த ஆண்டு விஜய் டிவி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் சன் டிவிக்கு சென்றது. அங்கு டாப் குக்கு டூப் குக்கு என்கிற சமையல் நிகழ்ச்சியை நடத்தி வெற்றி கண்டனர்.
அதேபோல் விஜய் டிவி டான்ஸ் ஷோ மற்றும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும் தற்போது டிஆர்பியில் பின்னுக்கு தள்ளப்பட்டு உள்ளது. தற்போது நடனம் மற்றும் பாட்டு நிகழ்ச்சிகளில் ஜீ தமிழ் தான் நம்பர் 1 ஆக உள்ளது. அதில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் மற்றும் சரிகமபா நிகழ்ச்சிகள் சக்கைப்போடு போட்டு வருகின்றன. இப்படி சன் டிவியும், ஜீ தமிழும் ரியாலிட்டி ஷோக்களில் ஆதிக்கம் செலுத்த தொடங்கி உள்ளதால், விஜய் டிவி பிரபலங்கள் படிப்படியாக சேனல் மாற தொடங்கி உள்ளனர்.
இதையும் படியுங்கள்... Shivaangi Love Failure: காதல் தோல்வி குறித்து முதல் முறையாக பகிர்ந்த குக் வித் கோமாளி ஷிவாங்கி!
அந்த வகையில் அண்மையில் மணிமேகலை விஜய் டிவியில் இருந்து ஜீ தமிழுக்கு தாவிய நிலையில், தற்போது விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக இருந்த ஷிவாங்கி சன் டிவிக்கு தாவி அதிர்ச்சி கொடுத்துள்ளார். அவர் சன் டிவியில் குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்படும் ஒரு ரியாலிட்டி ஷோவை நடத்த இருக்கிறார். இந்த ரியாலிட்டி ஷோவுக்கு ஹைப் ஏற்ற ‘யார் அந்த அக்கா?’ என்கிற பெயரில் புரோமோ வெளியிட்டு வைரலாக்கிய சன் டிவி தற்போது அது யார் என்பதை ரிவீல் செய்துள்ளது.
அதன்படி ஷிவாங்கி தொகுத்து வழங்க உள்ள அந்த ரியாலிட்டி ஷோவிற்கு ‘நானும் ரெளடி தான்’ என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த ரியாலிட்டி ஷோ விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. ஷிவாங்கி இதற்கு முன்னர் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகியாக கலந்துகொண்டார். பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக 3 சீசன் விளையாடிய ஷிவாங்கி, 4வது சீசனில் குக் ஆக வந்து தன்னுடைய சமையல் திறமையை காட்டி பைனல் வரை முன்னேறி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Sivaangi Krish : குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கிக்கு கல்யாணமா? அவரே போட்ட சமூக வலைதள பதிவு வைரல்