நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி வேண்டும் என கோரி நடந்த போராட்டம் வன்முறையாக மாறி 2 உயிர்களை பறித்துள்ளது. நேபாளத்தில் என்ன நடக்கிறது? மக்கள் மீண்டும் மன்னராட்சியை விரும்புவது ஏன்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
Nepal violent Protests demanding monarchy: இந்தியாவின் அண்டை மாநிலமான நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியை கொண்டு வர வேண்டும் எனக்கோரி நடந்த போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. தலைநகர் காத்மாண்டுவில் நடந்த வன்முறையில் பத்திரிகையாளர் உள்பட 2 பேர் கொல்லப்பட்டனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நீண்ட காலம் மன்னராட்சியின் பிடியில் இருந்த நேபாளத்தில் கடந்த 2008ம் ஆண்டு மக்களாட்சி மலர்ந்தது.
நேபாளத்தில் அரசு மீது மக்கள் வெறுப்பு
முடியாட்சி ஒழிக்கப்பட்டதில் இருந்து நேபாளத்தில் நிலையான அரசு அமையவில்லை. 2008ல் இருந்து தற்போது வரை சுமார் 13 அரசாங்களை நேபாளம் கண்டுள்ளது. அங்கு நிலையான அரசியல் இல்லாததால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. விலைவாசியும் விண்ணை நோக்கி சென்றது. நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதாக உறுதியளித்த அரசாங்கள் ஊழலில் திளைத்ததால் மக்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகினார்கள்.
இந்து ராஷ்டிர ஆட்சி வேண்டும்
இதன் காரணமாக கடந்த சில நாட்களாக நோபாளத்தில் மீண்டும் முடியாட்சியை அதாவது மன்னராட்சியை கொண்டு வரக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மன்னராட்சி மூலம் இந்து ராஷ்டிர ஆட்சி உருவாக வேண்டும் எனக்கோரி இந்து ராஷ்டிரத்துக்கு ஆதரவான ராஷ்ட்ரிய பிரஜாதந்திரக் கட்சி உள்ளிட்ட குழுவினர் போராட்டத்தில் இறங்கினார்கள்.
மியான்மர் நிலநடுக்கம்: பலி எண்னிக்கை 1600 ஐ கடந்தது! எங்கும் அழுகுரல்! பெரும் சோகம்!
மீண்டும் மன்னராட்சி
நேபாளத்தில் கடைசியாக 77 வயதான ஞானேந்திரா ஷா மன்னராக இருந்தார். அவரை மீண்டும் நாட்டை ஆட்சி செய்யக்கோரி ஞானேந்திரா ஷாவின் ஆதரவாளர்களும், மக்களும் வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கினார்கள். மன்னராட்சியும். இந்து ராஷ்டிர ஆட்சியும் வேண்டும் என்பதை வலியுறுத்தி காத்மாண்டுவில் போராட்டங்கள் நடந்தபோது வன்முறை வெடித்தது. அரசியல் கட்சியின் அலுவலகம், கடைகளை அடித்து நொறுக்கிய போராட்டக்காரர்கள் வாகனங்களுக்கும் தீ வைத்தனர்.
வன்முறையாக மாறிய போராட்டம்
மேலும் நாடாளுமன்றத்தை நோக்கி கற்களால் வீசினார்கள். காந்திபூர் தொலைக்காட்சி மற்றும் அன்னபூர்ணா போஸ்ட் அலுவலகங்களை சேதப்படுத்தினர். மேலும் ஒரு பல்பொருள் அங்காடியைக் சூறையாடினர். போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி வன்முறையாளர்களை கட்டுப்படுத்தினார்கள். இந்த வன்முறையில் 2 பேர் கொல்லபப்ட்டதால் நிலைமையை கட்டுப்படுத்த ராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர். தலைநகர் காத்மாண்டு உள்பட பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
தூண்டி விட்ட கடைசி மன்னர் ஞானேந்திரா ஷா
நாடு முழுவதும் காவலர்கள், ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. நாட்டின் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கட்டுப்படுத்த நேபாள பிரதமர் கே.பி. ஒலி அவசரமாக அமைச்சரவையை கூட்டி ஆலோசித்தார். முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷா அவரது ஆதரவாளர்களை தூண்டி விட்டு வன்முறையை ஏற்படுத்தி விட்டதாக அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது. ஏனென்றால் கடந்த பிப்ரவரி 19 அன்று தனக்குப் பின்னால் அணிதிரளுமாறு ஞானேந்திர ஷா அழைப்பு விடுத்து இருந்தார். இதன்பிறகே ஞானேந்திர ஷாவின் ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக அரசுக்கு எதிராக திரண்டு போராட்டம் நடத்த தொடங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரேசிலுக்குச் செல்லும் SU-57 போர் விமானம்! ரஷ்யாவின் வியூகம் என்ன?