IPL: மும்பையை வீழ்த்திய கையோடு புதிய சாதனை படைத்த சுப்மன் கில்! என்ன தெரியுமா?
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் புதிய வரலாற்று சாதனை ஒன்றை படைத்தார்.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் புதிய வரலாற்று சாதனை ஒன்றை படைத்தார்.
IPL: Shubman Gill Creates History: ஐபிஎல்லில் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான போட்டியில் குஜாரத் டைட்டன்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் வரலாறு படைத்தார். அதாவது நரேந்திர மோடி மைதானத்தில் 1000 ரன்கள் எடுத்த முதல் வீரர் ஆனார். இந்த சாதனையை அடைய கில்லுக்கு 14 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் இந்த போட்டியில் 38 ரன்கள் எடுத்து இந்த சாதனையை படைத்தார்.
நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் சுப்மன் கில் அற்புதமான சாதனைகள் வைத்துள்ளார். இங்கு 20 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து மூன்று சதங்கள், நான்கு அரை சதங்கள் அடித்து அசத்தியுள்ளார். இந்த போட்டியில் கில்-சுதர்சன் குஜராத் டைட்டன்ஸுக்கு அற்புதமான தொடக்கத்தை அளித்தனர். பவர் பிளேவில் ஸ்கோரை 66க்கு கொண்டு சென்றனர். இது சீசனில் விக்கெட் விழாமல் சென்ற முதல் இன்னிங்ஸ் பவர் பிளே ஆகும். இருப்பினும், ஒன்பதாவது ஓவரில் கில்லை மும்பை கேப்டன் ஹார்திக் பாண்டியா அவுட் செய்தார். 27 பந்துகளில் 38 ரன்கள் எடுத்த கில் இன்னிங்ஸில் ஒரு சிக்ஸ், நான்கு பவுண்டரிகள் அடித்தார்.
இந்த போட்டியில் சுப்மன் கில் ஒரே மைதானத்தில் 1000 ரன்கள் நிறைவு செய்ததுடன், மிக வேகமாக இந்த சாதனையை செய்த இரண்டாவது வீரர் ஆனார். வெறும் 20 இன்னிங்ஸ்களில் கில் ஒரே இடத்தில் ஆயிரம் ரன்கள் நிறைவு செய்தார். இதற்கு முன்பு பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் 19 இன்னிங்ஸ்களில் கிறிஸ் கெயில் 1000 ரன்கள் நிறைவு செய்து முதலிடத்தில் உள்ளார். அதேபோல், இந்த லிஸ்டில் உள்ள டேவிட் வார்னர் ஹைதராபாத் ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் 22 இன்னிங்ஸ்களில் 1000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டி மூன்றாவது இடத்தில் உள்ளார். மொஹாலியில் 26 இன்னிங்ஸ்களில் ஷான் மார்ஷ் 1000 ரன்கள் நிறைவு செய்து அடுத்த இடத்தில் இருக்கிறார்.
GT vs MI: சொல்லி அடித்த சுப்மன் கில் அண்ட் கோ! மும்பை இந்தியன்ஸ் அணி 2வது தோல்வி!
ஒரே மைதானத்தில் 1,000 ரன்களை கடந்த டாப்௫ ஐபிஎல் வீரர்கள் 1.கிறிஸ் கெயில்: எம். சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு - 19 இன்னிங்ஸ்கள் 2. ஷுப்மன் கில்: நரேந்திர மோடி ஸ்டேடியம், அகமதாபாத் - 20 இன்னிங்ஸ்கள் 3. டேவிட் வார்னர்: ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியம், ஹைதராபாத் - 22 இன்னிங்ஸ்கள் 4. ஷான் மார்ஷ்: பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம், மொஹாலி - 26 இன்னிங்ஸ்கள் 5. சூர்யகுமார் யாதவ்: வான்கடே ஸ்டேடியம், மும்பை - 31 இன்னிங்ஸ்கள்
ஐபிஎல்லில் ஒரே மைதானத்தில் அதிக ரன்கள் எடுத்த டாப்-5 வீரர்கள்: 1.விராட் கோலி: எம். சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு - 3040+ ரன்கள் 2. ரோஹித் சர்மா: வான்கடே ஸ்டேடியம், மும்பை - 2295+ ரன்கள் 3. ஏபி டிவில்லியர்ஸ்: எம். சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு - 1960+ ரன்கள் 4. டேவிட் வார்னர்: ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியம், ஹைதராபாத் - 1623+ ரன்கள் 5. கிறிஸ் கெயில்: எம். சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு - 1561+ ரன்கள்.
CSK தோல்விக்கு 5 முக்கிய காரணங்கள்! இந்த வீக்னஸை மாற்றாவிட்டால் அவ்வளவுதான்!