GT vs MI: மும்பைக்கு தண்ணி காட்டிய தமிழர்! குஜராத் டைட்டன்ஸ் 196 ரன்கள் குவிப்பு!
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தின்ஸ்க்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 196 ரன்கள் குவித்தது. தமிழக வீரர் சாய் சுதர்சன் அதிரடி அரைசதம் விளாசினார்.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தின்ஸ்க்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 196 ரன்கள் குவித்தது. தமிழக வீரர் சாய் சுதர்சன் அதிரடி அரைசதம் விளாசினார்.
IPL: Gujarat Titans vs Mumbai Indians Match: ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில் குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தங்கள் அணி முதலில் பவுலிங் செய்யும் என அறிவித்தார். அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் சுப்மன் கில் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடினார்கள். தனது டிரேட் மார்க் ஷாட்கள் மூலம் பவுண்டரிகள் விளாசிய சுப்மன் கில் 27 பந்தில் 4 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 38 ரன்கள் எடுத்து ஹர்திக் பாண்ட்யா பந்தில் கேட்ச் ஆனார். இதன்பிறகு களமிறங்கிய ஜோஸ் பட்லரும் அதிரடியில் மிரட்டினார். 24 பந்தில் 5 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 39 ரன்கள் எடுத்த பட்லர் முஜிப் உர் ரஹ்மான் பந்தில் அவுட் ஆனார்.
CSK தோல்விக்கு 5 முக்கிய காரணங்கள்! இந்த வீக்னஸை மாற்றாவிட்டால் அவ்வளவுதான்!
ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுபக்கம் சாய் சுதர்சன் நடப்பு ஐபிஎல் தொடரில் தனது 2வது அரைசதம் விளாசினார். பாஸ்ட் மற்றும் ஸ்பின்னர்களை திறம்பட எதிர்கொண்ட சாய் சுதர்சன் நேர்த்தியான ஷாட்களை ஆடினார். சிறப்பாக விளையாடிய சாய் சுதர்சன் 41 பந்தில் 61 ரன்கள் எடுத்து டிரண்ட் போல்ட்டில் யார்க்கரில் எல்பிடபிள்யூ ஆனார். அவர் 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் விளாசினார். ஆனால் மற்றொரு தமிழக வீரர் ஷாருக்கான் 9 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார்.
தொடர்ந்து ராகுல் தெவாட்டியா ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட்டும், ரூதர் போர்ட் 18 ரன்னில் தீபக் சாஹர் பந்தில் கேட்ச் ஆனார். கடைசி கட்டத்தில் கசிகோ ரபடா, ரஷித் கான் ஒரு சிக்சர் விளாசியதால் குஜராத் அணி 190 ரன்களை கடந்தது. குஜராத் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 196 ரன்கள் எடுத்தது. மும்பை அணியில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 197 என்ற இலாமலய இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்கிறது.
கொல்கத்தாவில் போட்டி இல்லை; ஐபிஎல் 2025 அட்டவணையில் அதிரடியாக நிகழ்ந்த மாற்றம்!