இந்திய அணி 2026 ஆகஸ்டில் தான் இலங்கை சென்று 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும். அடுத்து அக்டோபரில் நியூசிலாந்து சென்று 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும். 2027 தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உள்நாட்டில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டியில் 323 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதன் மூலம், நியூசிலாந்து அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) 2025-27 தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்று ஐசிசி தெரிவித்துள்ளது. நியூசிலாந்து அணி 77.78 வெற்றி சதவீதத்துடன் 2வது இடத்தில் உள்ளது.

WTC புள்ளிப்பட்டியல்

WTC 2025-27 சுழற்சியில் ஆஸ்திரேலியா அணி எந்த ஒரு தோல்வியும் அடையாமல் முதலிடத்தில் உள்ளது. அந்த அணி 100 சதவீத வெற்றியையும் பெற்று முதலிடத்தை அலங்கரித்துள்ளது. அடிலெய்டு டெஸ்டில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஷஸ் தொடரையும் ஆஸ்திரேலியா தக்கவைத்துள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்திய அணியின் நிலைமை பரிதாபம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணியின் நிலைமை பரிதாபமாக உள்ளது. அதாவது இந்திய அணி 9 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 4 தோல்வி, 1 டிராவுடன் 48.15 வெற்றி சதவீதத்துடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் அமர்ந்துள்ளது. தென்னாப்பிரிக்கா 75 வெற்றி சதவீதத்துடன் 3வது இடத்தில் அமர்ந்துள்ளது. தென்னாப்பிரிக்கா இரண்டாவது இடத்தில் இருந்தது. ஆனால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கில் வென்ற பிறகு நியூசிலாந்து தென்னாப்பிரிக்காவை ஓவர்டேக் செய்து 2ம் இடத்துக்கு சென்றது.

இந்தியா பைனலுக்கு செல்ல வாய்ப்புள்ளதா?

இந்திய அணி 2026 ஆகஸ்டில் தான் இலங்கை சென்று 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும். அடுத்து அக்டோபரில் நியூசிலாந்து சென்று 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும். 2027 தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உள்நாட்டில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும். இந்திய அணி மீதமுள்ள ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் குறைந்தது ஆறு அல்லது ஏழு போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். இப்படி நடந்தால் தான் இந்தியாவால் இறுதிப்போட்டியை நினைத்து பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.