GT vs MI: சொல்லி அடித்த சுப்மன் கில் அண்ட் கோ! மும்பை இந்தியன்ஸ் அணி 2வது தோல்வி!
குஜராத் டைட்டன்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. விளையாடிய 2 போட்டியிலும் மும்பை தோல்வியை தழுவியுள்ளது.
குஜராத் டைட்டன்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. விளையாடிய 2 போட்டியிலும் மும்பை தோல்வியை தழுவியுள்ளது.
IPL: Gujarat Titans beat Mumbai Indians: ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில் இன்று குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தங்கள் அணி முதலில் பவுலிங் செய்யும் என அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 196 ரன்கள் எடுத்தது.
தனது டிரேட் மார்க் ஷாட்கள் மூலம் பவுண்டரிகள் விளாசிய சுப்மன் கில் 27 பந்தில் 4 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 38 ரன்கள் எடுத்து ஹர்திக் பாண்ட்யா பந்தில் கேட்ச் ஆனார். இதன்பிறகு களமிறங்கிய ஜோஸ் பட்லரும் அதிரடியில் மிரட்டி 24 பந்தில் 5 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 39 ரன்கள் எடுத்தார். இதேபோல் சிறப்பாக விளையாடிய தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் நடப்பு ஐபிஎல் தொடரில் தனது 2வது அரைசதம் விளாசினார். சாய் சுதர்சன் 41 பந்தில் 61 ரன்கள் எடுத்து டிரண்ட் போல்ட்டில் யார்க்கரில் எல்பிடபிள்யூ ஆனார். அவர் 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் விளாசினார்.
இதனைத் தொடர்ந்து இமாலய இலக்கை நோக்கி மும்பை அணி பேட்டிங் செய்தது. முகமது சிராஜின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 8 ரன்னில் கிளீன் போல்டானார். இதேபோல் ரியான் ரிக்கல்டனும் முகமது சிராஜின் பந்தில் போல்டானார். பின்னர் ஜோடி சேர்ந்த திலக் வர்மாவும், சூர்யகுமார் யாதவ்வும் சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். பவுண்டரியும், சிக்சருமாக விளாசிய திலக் வர்மா 39 ரன்னில் பிரசித் கிருஷ்ணா பந்தில் கேட்ச் ஆனார். அப்போது ஸ்கோர் 11.3 ஓவரில் 97 ரன்கள் என இருந்தது.
GT vs MI: மும்பைக்கு தண்ணி காட்டிய தமிழர்! குஜராத் டைட்டன்ஸ் 196 ரன்கள் குவிப்பு!
அதன்பிறகு களமிறங்கிய ராபின் மின்ஸ் 3 ரன்னில் தமிழக வீரர் சாய் கிஷோர் பந்தில் அவுட் ஆனார். மறுபக்கம் சிக்சர் மழை பொழிந்து கொண்டிருந்த சூர்யகுமார் யாதவ்வும் 28 பந்தில் 48 ரன்கள் எடுத்து பிரசித் கிருஷ்ணா பந்தில் சுப்மன் கில்லிடம் கேட்ச் ஆணார். பிரசித் கிருஷ்ணாவின் சூப்பரான பந்துவீச்சு குஜராத் பக்கம் ஆட்டத்தை முழுமையாக திருப்பியது.
இதன்பிறகு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவும் 17 பந்தில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து ரபாடா பந்தில் கேட்ச் ஆனார். இதனால் மும்பை அணியின் தோல்வி உறுதியானது. இறுதிக்கட்டத்தில் மிட்ச்செல் சாண்ட்னர் (18 ரன் ), நமன் தீர் (18 ரன்) சில அதிரடியான ஷாட்களை விளையாடியது தோல்வியின் வித்தியாசத்தை மட்டுமே குறைக்க உதவியது. 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
குஜராத் அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா 4 ஓவரில் 18 ரன் மட்டுமே கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். முகமது சிராஜ் 2 விக்கெட்டும், சாய் கிஷோர், ரபடா தலா 1 விக்கெட் சாய்த்தனர். குஜராத் பவுலர்கள் சரியான லைன் அண்ட் லென்த்தில் பந்துவீசியது மட்டுமின்றி அதிக ஸ்லோயர் பால்களையும் போட்டு மும்பையை முடக்கி விட்டனார். குஜராத் அணிக்கு இது முதல் வெற்றியாகும்.
அதே வேளையில் ஏற்கெனவே சிஎஸ்கேவுடன் தோல்வி அடைந்த மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்து பரிதாபகரமான நிலையில் நிற்கிறது. இந்த ஆட்டத்தில் மும்பை அணி பேட்டிங், பவுலிங் மட்டுமின்றி பீல்டிங்கிலும் மோசமாக செயல்பட்டதே தோல்விக்கு முக்கிய காரணமாகி விட்டது.
CSK தோல்விக்கு 5 முக்கிய காரணங்கள்! இந்த வீக்னஸை மாற்றாவிட்டால் அவ்வளவுதான்!