இயக்குநர் மனோஜ் பாரதி திடீர் மரணம்; சிகிச்சையில் நடந்து என்ன?

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி, இதயப் பிரச்னை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Director Manoj Bharathiraja dies suddenly; what happened during treatment?

Manoj Bharathiraja death: இதயப் பிரச்னை தொடர்பாக சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி நேற்று இரவு  காலமானார். 

மனோஜ் பாரதிராஜாவுக்கு இதய அறுவை சிகிச்சை:

Latest Videos

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜின் திடீர் மறைவு தமிழ் திரையுலகை பெரும்  சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தாஜ்மகால் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி பலருக்கும் பரீட்சயமான மனோஜ், 48  வயதில் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், மாரடைப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால், இதயப் பிரச்னையை சரி செய்துவிடலாம் என்று, சென்னை அப்போலோ மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை முடிந்துள்ளது. 

போன வருஷம் இளையராஜா மகள்; இந்த வருஷம் பாரதிராஜா மகன் - வாரிசுகளின் இறப்பால் இடிந்துபோன இமயங்கள்!

மனோஜ் பாரதிராஜா மகள்கள்:

இதையடுத்து, கடந்த 6 நாட்களுக்கு முன்பாகத்தான் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளார் . இந்த நிலையில் சரிவர உடல் ஒத்துழைக்காத நிலையில், அவரது உயிர் பிரிந்ததாக  கூறப்படுகிறது  மலையாள நடிகை நந்தனாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட மனோஜுக்கு இரு மகள்கள் இருக்கின்றனர். இந்த நிலையில், அவரது மறைவு குடும்பத்தார் உட்பட தமிழ் திரையுலகையும் பெரும்  சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நிறைவேறாமல் போன மனோஜ் பாரதிராஜாவின் கடைசி ஆசை; 13 வருஷம் காத்திருந்தும் நடக்கல!

மனோஜ் பாரதிராஜாவுக்கு தலைவர்கள் அஞ்சலி: 

அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தமிழக வெற்றிக் கழகம் தலைவரும் நடிகருமான விஜய் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அல்லி அர்ஜூன்,  தாஜ்மகால், சமுத்திரம், மாநாடு போன்ற படங்களில் படங்களில் நடித்துள்ள மனோஜ் பாரதி, 
மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கிது குறிப்பிடத்தது . மனோஜ் பாரதியின் மறைவுக்கு பல திரையுலக பிரபலங்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

vuukle one pixel image
click me!