- Home
- Cinema
- போன வருஷம் இளையராஜா மகள்; இந்த வருஷம் பாரதிராஜா மகன் - வாரிசுகளின் இறப்பால் இடிந்துபோன இமயங்கள்!
போன வருஷம் இளையராஜா மகள்; இந்த வருஷம் பாரதிராஜா மகன் - வாரிசுகளின் இறப்பால் இடிந்துபோன இமயங்கள்!
இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணியும், இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜும் ஓராண்டு இடைவெளியில் மரணமடைந்துள்ளனர்.

Ilaiyaraaja Daughter and Bharathiraja Son Passed Away : இசைஞானி இளையராஜா மற்றும் இயக்குனர் பாரதிராஜா இருவருமே தேனியை சேர்ந்தவர்கள். அங்கிருந்து சினிமா கனவுடன் வந்து இன்று தனிப்பெரும் ஆளுமைகளாக உருவெடுத்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாகவும் பழகி வருகின்றனர். இடையிடையே சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டாலும் அதையெல்லாம் தூக்கிவீசிவிட்டு 80 வயதுக்கு மேலாகியும் நட்புடன் பழகி வருகிறார்கள்.
Ilaiyaraaja Daughter Bhavatharini
இளையராஜா - பாரதிராஜாவை போல் அவர்களது பிள்ளைகளும் நெருங்கிய நண்பர்களாகவே இருந்து வருகிறார்கள். இப்படி நட்பு பாராட்டி வரும் இவர்களின் குடும்பத்தில் அடுத்தடுத்து இரண்டு மரணங்கள் நிகழ்ந்துள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 25ந் தேதி மரணமடைந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பவதாரிணி சிகிச்சைக்காக இலங்கை சென்றிருந்தபோது அங்கு அவர் உயிர் பிரிந்தது. பவதாரிணிக்கு வயது 47.
வீடியோ : மகனின் மறைவால் உடைந்துபோன பாரதிராஜா; ஆறுதல் சொல்ல படையெடுத்து வந்த பிரபலங்கள்!
Bharathiraja Son Manoj
அதேபோல் இந்த ஆண்டு இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மரணமடைந்துள்ளார். ஹார்ட் சர்ஜெரி செய்துவிட்டு வீட்டில் ஓய்வெடுத்து வந்த மனோஜுக்கு மார்ச் 25-ந் தேதி மாலை மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை அவசர அவசரமாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். ஆனால் செல்லும் வழியிலேயே மனோஜ் பாரதிராஜாவின் உயிர் பிரிந்துவிட்டது. மனோஜுக்கு 48 வயது தான் ஆகிறது.
Ilaiyaraaja and Bharathiraja Family
மனோஜும், பவதாரிணியும் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் இருவரும் ஓராண்டு இடைவெளியில் மரணமடைந்து இருப்பது அவர்களது குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இளையராஜா - பாரதிராஜா என இரு இமயங்கள் தங்கள் வாரிசுகளை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்கள் இருவரின் குடும்பத்தினரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அதில் மனோஜ் மற்றும் பவதாரிணி சிரித்த முகத்தோடு இருந்தாலும் அதைப் பார்க்கும் ரசிகர்கள் கண்ணீர்சிந்தி வருகிறார்கள்.
இதையும் படியுங்கள்... நிறைவேறாமல் போன மனோஜ் பாரதிராஜாவின் கடைசி ஆசை; 13 வருஷம் காத்திருந்தும் நடக்கல!