
தாஜ்மஹால் படம் மூலமாக சினிமா உலகில் ஹீரோவாக அறிமுகமானவர் தான் மனோஜ் பாரதி. பல நடிகர், நடிகைகளை அறிமுகம் செய்து வைத்த பாரதிராஜா தான் தனது மகன் மனோஜ் பாரதியையும் தாஜ்மஹால் படத்தில் அறிமுகமானார். இந்தப் படத்திற்கு பிறகு நடிகர் சரத்குமார் நடிப்பில் வந்த சமுத்திரம் படத்தில் அவருக்கு தம்பியாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் கவுண்டமனி, செந்தில், முரளி, அம்பிகா ஆகியோர் பலர் நடித்திருந்தார். அதோடு கல்லூரியில் படிக்கும் மாணவனாக நடித்து அசத்தியிருந்தார்.
Breaking News: இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பால் உயிரிழப்பு!
அதன் பிறகு தொடர்ச்சியாக கடல் பூக்கள், அல்லி அர்ஜூனா, பல்லவன், வருஷமெல்லாம் வசந்தம், சாதுரியன், அன்னக்கொடி, வாய்மை, ஈஸ்வரன், மாநாடு போன்ற படங்களில் நடித்திருந்தார். கடைசியாக விருமன் படத்தில் நடித்தார். போதுமான சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் அவர் நடித்த படங்கள் பெரியளவில் ஹிட் கொடுக்காதது தான் என்று கூறப்படுகிறது.
சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே தனது நீண்ட கால தோழியான நந்தனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 2006 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி கேரளாவின் கோழிக்கோட்டில் தான் இவர்களது திருமணம் நடைபெற்றது. இது நந்தனாவின் சொந்த ஊர் என்பதால் அங்கு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து நவம்பர் 1 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமான அளவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
மனோஜ் மற்றும் நந்தனா தம்பதியினருக்கு ஆர்த்திகா மற்றும் மதிவதானி என்று 2 மகள்கள் இருக்கின்றனர். நடிகராக மட்டுமின்றி 2023 ஆம் ஆண்டு திரைக்கு வந்த மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தை தனது அப்பா பாரதிராஜாவையும் நடிக்க வைத்துள்ளார். அதோடு பின்னணி பாடகராகவும் இருந்துள்ளார். ஆம், தான் ஹீரோவாக அறிமுகமான தாஜ்மஹால் படத்தில் இடம் பெற்ற ஈச்சி எலுமிச்சி என்ற பாடலையும் பாடியுள்ளார்.
48 வயதில் மறைந்த நடிகர் மனோஜ் பாரதி ராஜாவின் மனைவி மற்றும் மகள்களை பார்த்திருக்கீங்களா?
சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்னதாக உதவி இயக்குநராக இருந்துள்ளார். அதோடு தனது அப்பா இயக்கிய Final Cut of Director என்ற பாலிவுட் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். மேலும், பிரம்மாண்ட இயக்குநரான ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் பலர் நடித்த எந்திரன் படத்திற்கு உதவி இயக்குநராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான் சேத்துப்பட்டில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் அவருக்கு இதய ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்துள்ளார். அவர் வயது 48. மனோஜின் மறைவு சினிமா பிரபலங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனோஜ் மறைவுக்கு நடிகர் சரத்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். இதே போன்று இளையராஜா வீடியோ வெளியிட்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.