அஜய் தேவ்கன் நடித்துள்ள 'ரெய்டு 2' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அஜய் தேவ்கன், ஹீரோவாக நடித்துள்ள  'ரெய்டு 2' திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்கிற தகவலை, தற்போது படக்குழு அறிவித்துள்ளது.

Ajay Devgn Raid 2 release date announced in tamil mma

அஜய் தேவ்கன் (: Ajay Devgn) தற்போது நடித்து முடித்துள்ள ரெய்டு 2 திரைப்படம்,  2025 மே 1 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த படம் குறித்து வெளியான தகவலின்படி, அஜய் தேவ்கன் 'ரெய்டு 2' படத்தில், வருமான வரி அதிகாரி, அமேய் பட்நாயக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராஜ்குமார் குப்தா இயக்கும் இந்த படத்தில் ரித்தேஷ் தேஷ்முக் வில்லனாக நடிக்க உள்ளதாகவும், வாணி கபூர் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Latest Videos

 இவர்களை தவிர ரஜத் கபூரும் இந்த படத்தில் நடிக்க உள்ளனர். படத்தின் படப்பிடிப்பு டெல்லி மற்றும் லக்னோவில் நடந்து முடிந்த நிலையில், தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. ஏற்கனேவ 'ரெய்டு 2' திரைப்படம் நவம்பர் 15, 2024 அன்று ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது  மே 1-ஆம் தேதி தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு  தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

இப்படத்தின் டீசர் முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதில் அமேய் பட்நாயக் திரும்பி வந்துவிட்டார் என்று குறிப்பிட்டிருந்தனர். அஜய் தேவ்கன் அமேய் பட்நாயக்காக திரும்பி வந்துள்ளார். என்பதால் ரசிகர்களும் படத்தின் மீதான தங்களின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

கடந்த ஆண்டின் தொடக்கத்தில், தான் அஜய் தேவ்கன் ரெய்டு இரண்டாம் பாகத்தை அறிவித்தார். அமேய் பட்நாயக்கின் வருகையை போஸ்டர் மூலம் தெரிவித்தார். 1980களில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த படத்தின் முதல் பாகத்தில், லக்னோவில் ஒரு சக்திவாய்ந்த நபரை எதிர்கொள்ளும் நேர்மையான வருமான வரி அதிகாரியை மையப்படுத்தியது. இந்த கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடிக்க படம் விமர்ச ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து தற்போது 2-ஆவது பாகம் அதன் தொடர்ச்சியாக உருவாகி வருகிறது. 'ரெய்டு 2' திரைப்படம் ராஜ்குமார் குப்தா, பூஷன் குமார், குமார் மங்கத் பதக், அபிஷேக் பதக் மற்றும் கிரிஷன் குமார் ஆகியோரின் கூட்டணியில் உருவாகிறது. 

vuukle one pixel image
click me!