சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் மக்களிடம் முக்கிய வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். அதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
Rajinikanth Supports CISF Coastal Cyclothon : பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்க பாதுகாப்புப் படையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் கடல்வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க கடலோரம் வாழும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையினர் சைக்கிள் பேரணியை நடத்தி வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட CISF வீரர்கள் இந்த சைக்கிள் பேரணியில் பங்கேற்று, மேற்கு வங்காளம் முதல் தமிழ்நாடு வரை உள்ள சென்று வருகின்றனர்.
ரஜினியின் திடீர் வீடியோ
தமிழ்நாட்டிற்கு அவர்கள் வரும் போது அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்து அவர்களை ஊக்குவிக்குமாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீடியோ வாயிலாக கேட்டுக்கொண்டார். அதில் அவர் கூறியதாவது : “நம்ம நாட்டோட பெயர், நிம்மதி, சந்தோஷம் அதை கெடுக்க பயங்கரவாதிகள் கடல்வழியாக நாட்டிற்குள் புகுந்து கோர சம்பவங்களை செய்வார்கள். அதற்கு உதாரணம் மும்பையில் 26/11ல் நடந்த தற்கொலைப் படை தாக்குதல் சம்பவம். கிட்டத்தட்ட 175 பேரோட உயிரை வாங்கிடுச்சு.
இதையும் படியுங்கள்... ராதிகா வந்தாலே செருப்பை பார்ப்பாராம் ரஜினி; பின்னணியில் இப்படி ஒரு மேட்டர் இருக்கா?
சைக்கிள் பேரணிக்கு ரஜினி ஆதரவு
இந்த கடலோர பகுதிகளில் வாழும் மக்கள் விழிப்புணர்வோடு இருந்து, சந்தேகத்திற்குரிய நபர்கள் யாரேனும் நடமாடினால், அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் தகவல் கொடுக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்த, 100க்கும் மேற்பட்ட மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை வீரர்கள், கிட்டத்தட்ட 7 ஆயிரம் கிலோ மீட்டர், மேற்கு வங்காளத்தில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிளில் பேரணியாக சென்று வருகிறார்கள். அவர்கள் உங்கள் ஏரியாவுக்கு வரும்போது அவர்களை வரவேற்று, முடிந்தால் அவர்களோடு கொஞ்ச தூரம் சென்று உற்சாகப்படுத்துங்கள் என ரஜினி அந்த வீடியோவில் பேசி உள்ளார்.
ஆதரவு தெரிவித்த பிரபலங்கள் யார்.. யார்?
ரஜினிகாந்த் மட்டுமின்றி நடிகர்கள் அமீர்கான், மாதவன் ஆகியோரும் இந்த பேரணிக்கு ஆதரவு கோரி வீடியோ வெளியிட்டு உள்ளனர். இதுதவிர கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, மகேந்திர சிங் தோனி ஆகியோரும் மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையினர் நடத்தி வரும் இந்த பேரணிக்கு வாழ்த்து தெரிவித்து அவர்களை ஊக்குவித்துள்ளனர். மொத்தம் 25 நாட்கள் நடைபெறும் இந்த பேரணியில் 11 மாநிலங்களை சைக்கிளில் கடக்க உள்ளனர்.
இதையும் படியுங்கள்... ரஜினிக்கு முடிவெட்ட 1 லட்சம் வாங்கும் சலூன் கடைக்காரர்; யார் இந்த ஆலிம் ஹக்கீம்?