MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • லாபத்தில் பங்கு: நடிகை ராதிகாவுக்கு முதல் 'Profit-Share' - சிவகார்த்திகேயன் படத்தால் வந்த மெகா ஜாக்பாட்!

லாபத்தில் பங்கு: நடிகை ராதிகாவுக்கு முதல் 'Profit-Share' - சிவகார்த்திகேயன் படத்தால் வந்த மெகா ஜாக்பாட்!

ராதிகாவின் நடிப்பில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் தாய் கிழவி இந்த படத்தில் ராதிகா சரத்குமார் லாபத்தில் சம்பளம் பெற்ற முதல் நடிகையாக திகழ்கிறார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Mar 12 2026, 03:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
தாய்க் கிழவி வெற்றி விழா
Image Credit : Instagram

தாய்க் கிழவி வெற்றி விழா

அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த தாய் கிழவி திரைப்படம் பிப். 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.வயதான தோற்றத்தில் ராதிகா அசத்தலான நடிப்பைக் கொடுத்ததுடன் கதை ரீதியாகவும் பலரிடமும் பாராட்டுகளைப் பெற்றது. இதனால், இதுவரை ரூ. 55 கோடிக்கும் அதிகமாக வசூலித்து நல்ல லாபத்தைக் கொடுத்து தாய்க் கிழவி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்றது.

26
சிவகார்த்திகேயன்
Image Credit : Instagram

சிவகார்த்திகேயன்

நடிகர் ‎சிவகார்த்திகேயன் தயாரிப்பில், சிவகுமார் முருகேசன் இயக்கி, ராதிகா நடித்து வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், திரைப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன், ராதிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். 

36
ராதிகா - தாய்க் கிழவி
Image Credit : Instagram

ராதிகா - தாய்க் கிழவி

படம் முழுவதும் காமெடியாகவும் ஒரு பெண்ணை மையமாக வைத்து இந்த சமூகத்தில் எப்படி பிழைக்கிறாள் என்றும் அவருக்கு எப்படிப்பட்ட கடினமும் கஷ்டங்களும் வருகின்றது என்பதை அழகாக எடுத்துக் காட்டி இருப்பார் சிவகுமார் முருகேசன். படம் பிளாக்பஸ்டர் ஆக தமிழ் சினிமாவில் உருமாறியது. ஒரு பெண்ணாக இருந்து தனது திறமையை எந்த அளவிற்கு தன் உடலுடன் வருத்தி வெளி கொண்டு வந்திருக்கிறார் என்பதற்கு ராதிகா சரத்குமார் ஒரு முன்மாதிரியாக விளங்குகின்றார்.

46
மேடையில் பேசிய ராதிகா சரத்குமார்:
Image Credit : Instagram

மேடையில் பேசிய ராதிகா சரத்குமார்:

 விழாவில் பேசிய நடிகை ராதிகா, ''உண்மையான வெற்றியை கொண்டாட இந்த மேடையில் நிற்கிறேன். நான் எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டேன்‌. எனக்கு இந்தப் படம் மிகவும் பிடித்திருந்தது அதனால் நான் இந்த படத்தை நடிப்பதற்கு ஒப்புக்கொண்டேன். சித்தி சீரியலுக்கு பிறகு ஒரு பெண் தனியாக நின்று போராடும் கதைக்களமாக எனக்கு இது தோன்றியது அதனால் நான் இந்தப் படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டேன் என்றும் தனது மகிழ்ச்சியான உணர்வை வெளிப்படுத்தினார் ராதிகா சரத்குமார். 

56
தாய்க் கிழவி
Image Credit : X

தாய்க் கிழவி

இந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு நேற்று மட்டும் 6 கதைகளை கேட்டேன். எல்லாமே கிழவிகளை மையமாக வைத்து எடுக்கும் படம் டைரக்டர்கள் என்னிடம் வந்து கதை சொல்கிறார்கள் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது அதை எல்லாம் ஸ்டாப் என்று நிறுத்தி விட்டேன். என்று காமெடியாக பேசினார் ராதிகா சரத்குமார். இந்த திரைப்படத்தில் பெண்களுக்காக குறைந்த விலையில் டிக்கெட் விற்கப்பட்டு ரூ. 50 கோடி கலக்‌ஷென் வந்துள்ளது. இயக்குநர் சிவக்குமார் முருகேசனுக்காக இந்த படம் வெற்றி அடைய வேண்டும் என கமல்ஹாசன் கூறினார்.எனது இத்தனை நாள் கலைப்பயணத்தில் இந்த படத்தின் வெற்றியை பார்த்தது பெரும் பாக்கியம். ‎‎ஏனென்றால் பெண்னை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் என்பதால் எனக்கு என் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறது என்றும் கூறினார்.

66
லாபத்தில் பங்கு:
Image Credit : X

லாபத்தில் பங்கு:

ஒரு நடிகையாக 48 ஆண்டு கால அனுபவத்தில் இதுவரையில் நான் பெறாத ஒன்று படத்தின் லாபத்தில் கிடைக்கும் பங்கை சம்பளமாக பெற்றுள்ளேன். தமிழ் திரையுலகிலேயே லாபத்தில் கிடைக்கும் பங்கில் சம்பளம் பெற்ற ஹீரோயின் நானாக தான் இருப்பேன். ஒவ்வொரு நாளும் வசூலை வாரி குவிக்கின்றது. நான் படத்திற்காக சொல்லவில்லை எனக்கு என் மனது சந்தோஷத்திற்காகவும் நான் நடித்த பெருமைக்காகவும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது என்றோம் கூறினார் ராதிகா சரத்குமார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சிவகார்த்திகேயன்
ராதிகா சரத்குமார்
தமிழ் சினிமா
சினிமா
திரைப்பட விமர்சனம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
மேட் இன் கொரியா படம் டம்மி பீஸா? டாப் கிளாஸா? விமர்சனம் இதோ
Recommended image2
ஏன் முடங்கியது ஜன நாயகன்?" - கிடப்பில் போடப்பட்ட படம்; விடிவுகாலம் எப்போது? ஒரு சிறப்புப் பார்வை!
Recommended image3
Top 10 Serial TRP : அதளபாதாளத்தில் எதிர்நீச்சல்; அடிவாங்கிய அய்யனார் துணை - இந்த வார டாப் 10 சீரியல் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved