MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 48 வயதில் மறைந்த நடிகர் மனோஜ் பாரதி ராஜாவின் மனைவி மற்றும் மகள்களை பார்த்திருக்கீங்களா?

48 வயதில் மறைந்த நடிகர் மனோஜ் பாரதி ராஜாவின் மனைவி மற்றும் மகள்களை பார்த்திருக்கீங்களா?

பிரபல நடிகர் மற்றும் இயக்குனர், பாரதி ராஜாவின் மகன் மனோஜ் பாரதி ராஜா மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், இவரது குடும்ப புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Mar 25 2025, 09:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

தமிழ் சினிமாவில் தலை சிறந்த இயக்குனர் என பெயர் எடுத்தவர், இயக்குனர் இமையம் என கொண்டாடப்படும் பாரதி ராஜா அவர்கள். '16 வயதினிலே' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், அதை தொடர்ந்து,  'கிழக்கே போகும் ரயில்', 'சிகப்பு ரோஜாக்கள்', 'புதிய வார்ப்புகள்', 'நிறம் மாறாத பூக்கள்', 'கல்லுக்குள் ஈரம்', 'அலைகள் ஓய்வதில்லை', 'டிக் டிக் டிக்' போன்ற பல படங்களை இயக்கினார்.

28
இயக்குனர் பாரதி ராஜாவின் மகன்

இயக்குனர் பாரதி ராஜாவின் மகன்

தமிழ் சினிமாவில், பல முன்னணி ஹீரோக்களையும், ஹீரோயின்களையும் உருவாக்கி உள்ள பாரதி ராஜாவின் மகன், ஒரு இயக்குனராக மாறுவார் என்றே பலரும் எதிர்பார்த்தனர். காரணம் தமிழ் சினிமாவில் உள்ள சில முக்கிய இயக்குனர்களிடம், துணை இயக்குனராக பணியாற்றி வந்தார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக, 1999 ஆம் ஆண்டு  தன்னுடைய தந்தை பாரதி ராஜாஇயக்கத்திலேயே   'தாஜ் மஹால்' படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.

நடிகர் மனோஜ் பாரதிராஜாவுக்கு இவ்வளவு பெரிய மகள்களா? பார்க்க ஹீரோயின் போல் இருக்காங்களே.. லேட்டஸ்ட் போட்டோஸ்!

38
தாஜ்மகால் படம் மூலம் அறிமுகம்

தாஜ்மகால் படம் மூலம் அறிமுகம்

மனோஜ் பாரதிராஜா, ஹீரோவாக அறிமுகமான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், மனோஜுக்கு நல்ல அறிமுகத்தை பெற்று தந்தது. இதை தொடர்ந்து...  கடல்பூக்கள், வருஷமெல்லாம் வசந்தம், அல்லி அர்ஜுனா, ஈரநிலம், சமுத்திரம், அன்னக்கொடி போன்ற பல படங்களில் நடித்தார்.

48
முன்னணி இடத்தை பிடிக்க முடியாமல் போன துயரம்

முன்னணி இடத்தை பிடிக்க முடியாமல் போன துயரம்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோ என்கிற இடத்தை பிடிக்க முடியாமல் போன நிலையில், குணச்சித்திர நடிகராக மாறினார். நடிகர் என்பதை தாண்டி, கடந்த ஆண்டு வெளியான 'மார்கழி திங்கள்' என்கிற படத்தையும் இயக்கி இருந்தார். புதுமுக நடிகர் - நடிகைகள் இந்த படத்தில் நடித்திருந்தனர். கிராமத்து காதலையும், அங்குள்ள சமூக பிரச்சனை பற்றியும் இந்த படம் பேசியது.

watch : இடி தாக்கியதில் நூலிழையில் உயிர்தப்பிய ‘மார்கழி திங்கள்’ படக்குழு - வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ

58
நடிகை நந்தனாவை காதலித்து திருமணம்

நடிகை நந்தனாவை காதலித்து திருமணம்

மனோஜ் பாரதி ராஜா சாதுரியன் என்கிற படத்தில் நடிக்கும் போது, தனக்கு ஜோடியாக நடித்த நடிகை நந்தனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு தற்போது மதிவதனி, அர்த்திகா என இரண்டு மகள்கள் உள்ளனர். 

68
48 வயதில் உயிரிழந்த மனோஜ்

48 வயதில் உயிரிழந்த மனோஜ்

மனோஜ் பாரதி ராஜாவின் மூத்த மகள் இயக்குனராக வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டும் நிலையில் இளைய மகள் படித்து வருகிறார். 48 வயதாகும் மனோஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இதயத்தில் இருந்த பிரச்சனை காரணமாக ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்திருந்தார். 

மனோஜ் பாரதிராஜா இயக்கும் மார்கழி திங்கள் படப்பிடிப்பில் விபத்து! அதிஷ்டவசமாக உயிர் தப்பிய 5 பேர்!

78
மாரடைப்பு காரணமாக மரணம்

மாரடைப்பு காரணமாக மரணம்

இதை தொடந்து படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளாமல் ஓய்வில் இருந்த நிலையில், இவருக்கு திடீர் என இன்று மாலை 6 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, வீட்டிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவரது மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

88
மனோஜ் பாரதி ராஜா குடும்ப புகைப்படம்:

மனோஜ் பாரதி ராஜா குடும்ப புகைப்படம்:

மனோஜ் பாரதிராஜா, மறைவை தொடந்து இவர் தன்னுடைய காதல் மனைவி நந்தனாவை மற்றும் இரு மகள்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
மனோஜ் பாரதிராஜா
பாரதியார்
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
எதிரிகளாக இருந்த MGR - கண்ணதாசன்! ஒரே பாடலில் Friends ஆக மாறிய கதை தெரியுமா?
Recommended image2
டாக்ஸிக் படத்திற்காக யாஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Recommended image3
ஏத்திவிட்ட மீனா... குதிரைக் கொம்பாக நிற்கும் கோமதி; மனம் இறங்கினாரா பாண்டியன்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved