ஜப்பானில் அனிருத் பாடலுக்கு ஆட்டம் போட்ட ஜூனியர் என்.டி.ஆர் - வைரலாகும் வீடியோ

தேவரா படம் ஜப்பானில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அதன் புரமோஷனுக்காக ஜப்பான் சென்றுள்ள ஜூனியர் என்.டி.ஆர். அங்கு நடனமாடி அசத்தி உள்ளார்.

Junior NTR Vibing to Ayudha Pooja Song in Japan Video Goes Viral gan

Viral video: Jr. NTR dances to the song 'Ayudha Pooja' in Japan! தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ஜூனியர் என்டிஆர் தற்போது தனது வரவிருக்கும் வார் 2 மற்றும் டிராகன் திரைப்படங்களில் பிஸியாக இருக்கிறார். இதற்கிடையில், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் 2024ம் ஆண்டு வெளியான தேவரா பாகம் 1 திரைப்படம் தற்போது ஜப்பானில் வெளியாகவுள்ளது. இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கிய இந்த திரைப்படம் மார்ச் 28 ஆம் தேதி ஜப்பானில் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும், தனது திரைப்படத்தை விளம்பரப்படுத்த ஜூனியர் என்டிஆர் மார்ச் 22 ஆம் தேதி ஜப்பான் சென்றார். 

ஜப்பானில் ஆட்டம் போட்ட ஜூனியர் என்.டி.ஆர்

Latest Videos

இந்நிலையில் ஜப்பானின் தேவரா படத்தின் புரமோஷனில் கலந்துகொண்ட நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், அப்படத்திற்காக அனிருத் இசையமைத்த ‘ஆயுத பூஜை’ பாடலுக்கு நடனமாடி இருந்தார். அப்போது அவரது நடனத்தை பார்த்து மெர்சலான ஜப்பானிய மக்கள் அவருக்கு கைதட்டி ஆரவாரம் செய்தனர். இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவைப் போல் ஜப்பானிலும் தேவரா படம் மாஸ் காட்டுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

fever grips Japan! 🌊🔥

Man of Masses stuns the Japanese audience as he grooves to Ayudha Pooja with a fan! 🤙🏻 pic.twitter.com/y9ybqaAYsT

— Devara (@DevaraMovie)

இதையும் படியுங்கள்... ஜூனியர் NTRன் பிரம்மாண்ட கட்அவுட்.. தீ வைத்து எரிக்கப்பட்டதா? வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

ஜப்பானில் தேவரா ரிலீஸ்

இதற்கு முன்பு எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்த ஆர்ஆர்ஆர் (RRR) திரைப்படம் ஜப்பான் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்தது. ஜூனியர் என்டிஆர் நடித்த தேவரா பாகம் 1 கடந்த ஆண்டு செப்டம்பர் 2024 இல் வெளியானது. இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கிய இந்த திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆருடன் இணைந்து ஜான்வி கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், சைஃப் அலிகான் வில்லனாக நடித்திருந்தார். 

ஜூனியர் என்.டி.ஆர் கைவசம் உள்ள படங்கள்

300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 421 கோடி ரூபாய் வசூல் செய்தது. திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஜூனியர் என்டிஆர்  கைவசம் தற்போது வார் 2 மற்றும் டிராகன் ஆகிய திரைப்படங்கள் உள்ளதால், அதை முடித்த பின்னரே அவர் தேவரா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்... ஜூனியர் NTR இன் DEVARA படத்தின் அர்த்தம் என்ன?

vuukle one pixel image
click me!