vuukle one pixel image

கிராம சபைக் கூட்டதில் மக்கள் சரமாரி கேள்வி; பதில் சொல்லாமல் திணறிய அமைச்சர் KKSSR ராமசந்திரன்!

Velmurugan s  | Published: Mar 29, 2025, 6:00 PM IST

விருதுநகர் மாவட்டம் பாலவனத்தம் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் இன்று நடக்கும் என ஊராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது. கிராம சபைக்கு மக்கள் வந்தனர். ஆனால், கிராம சபை கூட்டம் நடக்கவில்லை. மாறாக, அந்த இடத்தின் அருகே, வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 100 நாள் வேலைத்திட்டத்தில் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு தர வேண்டிய சம்பள நிலுவையை வழங்கக் கோரி அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் இடையில் பாஜக நிர்வாகி ஒருவர் அமைச்சர் ராமச்சந்திரனிடம் நேருக்கு நேராக சரமாரி கேள்வி கேட்டார். கிராமசபைக் கூட்டம் நடக்கும் இடத்தில் எதற்காக ஆர்ப்பாட்டம் நடத்துகிறீர்கள், கிராம சபை இடத்தை ஏன் போராட்டக்களமாக மாற்றுகிறீர்கள். மக்களை ஏன் திசை திருப்புகிறீர்கள் என கேள்வி கேட்டார். மத்திய அரசு 36 ஆயிரம் கோடி ரூபாயை தமிழகத்துக்கு ஒதுக்கியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது. அதுபற்றி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. புகாரை விசாரித்தபின் சம்பளம் வழங்குவார்கள். அதற்குள் மத்திய அரசை குறைகூறி ஒரு அமைச்சரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடலாமா? அமைச்சரே பதில் சொல்லுங்கள் என மக்கள் கேள்வி கேட்டனர்.