MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Sivaangi Krish : குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கிக்கு கல்யாணமா? அவரே போட்ட சமூக வலைதள பதிவு வைரல்

Sivaangi Krish : குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கிக்கு கல்யாணமா? அவரே போட்ட சமூக வலைதள பதிவு வைரல்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான சிவாங்கி திருமணம் குறித்து போட்ட பதிவு இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

2 Min read
Author : Ganesh A
| Updated : Mar 29 2024, 02:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட சிவாங்கி. அதில் வெற்றிவாய்ப்பை நழுவவிட்ட பின்னர், அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பளித்தது. அந்நிகழ்ச்சியில் முதல் மூன்று சீசன்களில் போட்டியாளராக கலந்துகொண்ட சிவாங்கி, நான்காவது சீசனில் போட்டியாளராக களமிறங்கி, தன்னுடைய சமையல் திறமையை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். அந்த சீசனில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய அவர் வெற்றிவாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார்.

24

குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பொறுத்தவரை, கோமாளியாக இருந்தால் அவர்களுக்கு அடுத்தடுத்த சீசன்களில் வாய்ப்பளிக்கப்படும். ஆனால் குக்காக கலந்துகொள்பவர்களுக்கு ஒரு சீசன் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். அதனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் குக் ஆக கலந்துகொண்டதன் காரணமாக இனி சிவாங்கியால் அந்நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத சூழல் உருவானது. இதனால் சினிமாவில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார் சிவாங்கி.

இதையும் படியுங்கள்... KPY Bala : மருத்துவமனை கட்டி... அனைவருக்கும் இலவச சிகிச்சை! அடுத்த டார்கெட் இதுதான்... மனம்திறந்த பாலா

34

சிவாங்கி கடந்த 2022-ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அப்படத்தில் பிரியங்கா மோகனின் தோழியாக நடித்திருந்த அவர், முதல் படத்திலேயே தன்னுடைய கியூட்டான நடிப்பால் கவனம் ஈர்த்தார். இதையடுத்து வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் காமெடி கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். ஆனால் அப்படம் படு தோல்வியை சந்தித்தது. இதையடுத்து நடிப்பு மட்டுமின்றி பாடகியாகவும் கலக்கி வருகிறார் சிவாங்கி.

44

இந்த நிலையில், சிவாங்கி தன்னுடைய திரெட்ஸ் பக்கத்தில் போட்டுள்ள பதிவு இணையத்தில் படு வைரலாகி வருகிறது. அந்த பதிவில், சோசியல் மீடியாவை திறந்தாலே யாருக்காவது திருமணம் முடிந்திருக்கிறது, இல்லை நிச்சயதார்த்தம் முடிந்திருக்கிறது அல்லது கர்ப்பமாக இருப்பதாக பதிவிடுகிறார்கள். நானும் தற்போது அந்த ஒரு கட்டத்தில் தான் இருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் அப்போ உங்களுக்கும் விரைவில் திருமணம் ஆகப்போகிறதா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... Vijay Net worth : 250 கோடி சம்பளம்... 2 ஆண்டுகளில் மளமளவென உயர்ந்த விஜய்யின் சொத்து மதிப்பு - அதுவும் இவ்வளவா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குக் வித் கோமாளி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved