KPY Bala : மருத்துவமனை கட்டி... அனைவருக்கும் இலவச சிகிச்சை! அடுத்த டார்கெட் இதுதான்... மனம்திறந்த பாலா
சமூக நலப்பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் பாலா, மருத்துவமனை கட்டி இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதே தனது நீண்ட நாள் கனவு என தெரிவித்துள்ளார்.
KPY Bala
விஜய் டிவி கண்டெடுத்த முத்துக்களில் ஒருவர் தான் பாலா. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. அதன்பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அனைவரையும் ரவுண்டு கட்டி கலாய்த்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார். அந்நிகழ்ச்சி பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனதற்கு பாலாவும் ஒரு காரணம் என்று சொன்னால் அதை யாராலும் மறுக்க முடியாது.
cook with comali Bala
பின்னர் படிப்படியாக சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கியதால் குக் வித் கோமாளியில் இருந்து விலகிய அவர், படங்களில் நடித்தும் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். பொதுவாக சினிமாவில் உள்ளவர்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஆடம்பர செலவு செய்வார்கள். ஆனால் பாலா, தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பாலானவற்றை பிறருக்கு உதவி செய்ய பயன்படுத்தி வருகிறார்.
இதையும் படியுங்கள்... Vijay Net worth : 250 கோடி சம்பளம்... 2 ஆண்டுகளில் மளமளவென உயர்ந்த விஜய்யின் சொத்து மதிப்பு - அதுவும் இவ்வளவா?
kpy bala free Ambulance
முதியோர் இல்லத்திற்கு உதவுவது, ஏழைக் குழந்தைகளை படிக்க வைப்பது, கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுப்பது, வறுமையில் உள்ளவர்களுக்கு பண உதவி செய்வது என பாலா தொடர்ந்து பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். இதனால் அவருக்கு பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்கள் பலரும் பாலாவின் செயல்களை மேடைகளில் சுட்டிக்காட்டி பாராட்டி அவரை ஊக்கப்படுத்துகின்றனர்.
KPY Bala plan to build free hospital
இந்த நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட பாலாவிடம் அவரது நீண்ட நாள் ஆசை பற்றி கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், மருத்துவமனை கட்டி இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது தான் தனது நீண்ட நாள் ஆசை என கூறினார். அவர் படிக்க வைக்கும் ஒரு பையன் தற்போது இன்ஜினியரிங் படித்து வருகிறாராம். அவர் அடுத்த ஆண்டு படித்து முடித்ததும் அந்த மருத்துவமனைக்கான பிளானை நானே போட்டு கொடுத்து கட்டி தருவதாக கூறியதாக பாலா தெரிவித்தார். முக்கியமாக இதயம் சம்பந்தமான சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையை கட்ட ஆசைப்படுவதாக பாலா அந்த பேட்டியில் கூறினார். அவரின் இந்த பேட்டியை பார்த்த பலரும் சீக்கிரம் அவரது ஆசை நிறைவேறும் என வாழ்த்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... Dhanush Salary : என்னது ஒரு படத்துக்கு 100 கோடியா...! சம்பளத்தை ஜெட் வேகத்தில் உயர்த்திய தனுஷ் - காரணம் என்ன?