டீனோ டென்னிஸ் இயக்கத்தில் மம்மூட்டி, கெளதம் மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் பசூக்கா திரைப்படத்தில் டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.
'Bazooka' Trailer: New Film's First Look Revealed! மம்மூட்டி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் பசூக்கா. இப்படம் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தற்போது படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. மம்மூட்டி உட்பட பலரும் டிரெய்லரைப் பகிர்ந்துள்ளனர். முன்னதாக, பசூக்கா பிப்ரவரி 14-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. டீனோ டென்னிஸ் திரைக்கதை எழுதி இயக்குகிறார். அறிவிப்பு வெளியானதில் இருந்து இப்படம் அதிக கவனம் பெற்ற நிலையில், தற்போது ஸ்டைலிஷான காட்சிகளுடன் வெளியாகி உள்ள இப்படத்தின் டிரைலர் வைரலாகி வருகிறது.
மம்மூட்டியுடன் நடித்த கெளதம் மேனன்
மம்மூட்டியுடன், இயக்குநரும் நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சித்தார்த் பரதன், பாபு ஆண்டனி, ஹக்கீம் ஷாஜகான், பாமா அருண், டீன் டென்னிஸ், சுமித் நேவல், திவ்யா பிள்ளை, ஸ்படிகம் ஜார்ஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தில் கௌதம் மேனன் பெஞ்சமின் ஜோஷ்வா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். காப்பா படத்திற்கு பின் சரிகம மற்றும் தியேட்டர் ஆஃப் ட்ரீம்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் பசூக்கா.
இதையும் படியுங்கள்... மலையாள நடிகர் மம்முட்டிக்கு கேன்சரா? காட்டுத்தீ போல் பரவிய தகவல் - உண்மை என்ன?
பசூக்கா படக்குழு
இப்படத்தில் ஒளிப்பதிவு பணிகளை நிமிஷ் ரவி மேற்கொண்டுள்ளார், எடிட்டிங் பணிகளை நிஷாத் யூசுப் மற்றும் பிரவீன் பிரபாகர் கவனித்துள்ளனர். மிதுன் முகுந்தன் இசையமைப்பாளராக பணியாற்றி உள்ளார். மேலும் கலை இயக்குனராக ஷிஜி பட்டணம் மற்றும் அனீஸ் நாடோடி பணியாற்றி இருக்கிறார்கள். ஆடை அலங்காரம் சமீரா சனீஷ், சண்டை பயிற்சியாளராக மகேஷ் மேத்யூ, விக்கி, பி சி ஸ்டண்ட்ஸ், மாஃபியா சஷி ஆகியோர் பணியாற்றி உள்ளனர்.
Presenting The Official Trailer of !!
Youtube Link : https://t.co/EPQutsjgyZ
In Cinemas Worldwide from April 10 pic.twitter.com/MxtkJbnKNY
அஜித் படத்துடன் மோதும் பசூக்கா
மம்மூட்டி நடிப்பில் இந்த ஆண்டு ரிலீஸ் ஆகும் இரண்டாவது படம் இந்த பசூக்கா. இதற்கு முன்னதாக கடந்த ஜனவரி மாதம் கெளதம் மேனன் இயக்கத்தில் அவர் நடித்த டொமினிக் திரைப்படம் ரிலீஸ் ஆகி இருந்தது. பசூக்கா திரைப்படம் ஏப்ரல் 10ந் தேதி ரிலீஸ் ஆகிறது. அன்றைய தினம் தான் தமிழில் நடிகர் அஜித்குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ஒரே வருடத்தில் 36 படங்களில் நடித்து சாதனை படைத்த சூப்பர் ஸ்டார் யார் தெரியுமா?