கமலஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் பெயரை பயன்படுத்தி வாய்ப்பு தருவதாக மோசடியில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கமலஹாசன் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில், பன்முகத் திறமையாளராக அறியப்படுபவர் கமலஹாசன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் நடன இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், பாடகர், இயக்குனர், என சினிமாவில் தன்னுடைய பல திறமைகளை வெளிப்படுத்தினார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் தொகுப்பாளராகவும் கலக்கினார்.
இவரைத் தொடர்ந்து இவருடைய மகள்கள் இருவருமே தற்போது திரைத்துறையில் தான் பணியாற்றி வருகின்றனர். ஸ்ருதிஹாசன் நடிகையாகவும், பாடகியாகவும் உள்ளார். இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன் ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளது மட்டுமின்றி, அசிஸ்டன்ட் டைரக்டராகவும் பணியாற்றி வருகிறார்.
கமல்ஹாசனின் கைவசம் தற்போது தக் லைப் படம் மட்டுமே உள்ள நிலையில், இன்னும் ஒரு வருடம் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர தன்னுடைய ராஜ் கமல் பிலிம்ஸ் மூலம், சில திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். இதுவரை 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ள ராஜ் கமல் நிறுவனம் தற்போது தரமான படங்களை மட்டுமே தேர்வு செய்து தயாரித்து வருகிறது.
கமல் ஹாசன் சொன்னா முகத்தை கழுவித்தான் ஆகணும்; ராணி முகர்ஜி சொன்ன மேக்கப் ஸ்டோரி!
அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான 'அமரன்' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாகவும், சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருந்தனர். இப்படம் 70 முதல 90 வரையிலான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், 350 கோடி வரை வசூல் சாதனை செய்தது.
இதை தொடர்ந்து, தற்போது மணிரத்தினம் இயக்கி வரும் 'தக் லைப்' திரைப்படத்தையும் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து. சிலம்பரசன், திரிஷா, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஜூன் மாதம் 5-ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் கமல்ஹாசன் எச்சரிக்கை விடுக்கும் விதமாக தன்னுடைய சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ராஜ்கமல் பிலிம்ஸ், இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்த ஒரு காஸ்டிக் ஏஜெட்டுகளையும் நாங்கள் நியமிக்கவில்லை. என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில், வாய்ப்பு வாங்கி தருவதாக வரும் செய்திகள் எவ்வகையிலும் உங்களை வந்தடைந்தாலும், அதை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். எங்களது ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை அனுமதி இன்றி பயன்படுத்தி மோசடிகளின் ஈடுபடுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இதன் மூலம் எச்சரிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.