நியூஜெர்சிக்கான அமெரிக்க வழக்கறிஞர் அலினா ஹப்பாவின் பதவியேற்பு விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், பிரதமர் மோடியின் தலைமைப் பண்புகளைப் பாராட்டிப் பேசினார். மோடி சிறந்த பிரதமர் எனவும் குறிப்பிட்டார். பிரதமர் மோடி சமீபத்தில் இங்கு வந்தார். நாங்கள் எப்போதும் நல்ல நண்பர்களாக இருந்திருக்கிறோம்," என்றார். "இந்தியா உலகின் அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்று... அவர்கள் மிகவும் புத்திசாலிகள். அவர் (பிரதமர் மோடி) ஒரு புத்திசாலி. எனக்கு ஒரு சிறந்த நண்பர்" என்று டிரம்ப் கூறினார்.