நீச்சல் உடையில் டூமச் கிளாமர்... திடீரென கவர்ச்சி புயலாக மாறிய ராஷ்மிகா - வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்

First Published Oct 14, 2022, 8:47 AM IST

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியான நடிகையாக வலம்வரும் ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

நடிகை ராஷ்மிகா மந்தனா கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி என்கிற கன்னட திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

கன்னடத்தில் ஒரு சில படங்களில் இவர் ஹீரோயினாக நடித்திருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பேமஸ் ஆக்கியது தெலுங்கு படங்கள் தான்.

நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் ஆகிய படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின.

பின்னர் இவருக்கு தமிழ் பட வாய்ப்பும் கிடைத்தது. அதன்படி பாக்யராஜ் கண்ணன் இயக்கிய கார்த்தியின் சுல்தான் படத்தின் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார் ராஷ்மிகா.

இதன்பின்னர் தெலுங்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக இவர் நடித்த புஷ்பா மற்றும் துல்கர் சல்மானின் சீதா ராமம் ஆகிய படங்கள் பிரம்மாண்ட வெற்றியை ருசித்தன.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த ராஷ்மிகாவுக்கு இந்தி பட வாய்ப்புகளும் அடுத்தடுத்து குவிந்தன.

இதையும் படியுங்கள்... இது செம்ம கூட்டணியா இருக்கே... வடிவேலு உடன் முதன்முறையாக இணையும் விஜய் சேதுபதி - அடடே இயக்கப்போவது இவரா..!

அதன்படி இவர் நடித்த முதல் இந்தி படமான Goodbye சமீபத்தில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதில் அமிதாப் பச்சனுடன் நடித்திருந்தார் ராஷ்மிகா.

இதுதவிர் மிஷன் மஜ்னு மற்றும் அனிமல் போன்ற இந்தி படங்களையும் கைவசம் வைத்து பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார் ராஷ்மிகா.

தற்போது வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா.

இவ்வாறு படு பிசியாக நடித்து வரும் இவர், சமீபத்தில் நாளிதழ் ஒன்றிற்காக நடத்திய கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

வித விதமான கவர்ச்சி உடை முதல் நீச்சல் உடை வரை ராஷ்மிகா மந்தனா படு கிளாமராக போஸ் கொடுத்துள்ளதை பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப்போய் உள்ளனர். 

சோசியல் மீடியாவில் ராஷ்மிகா மந்தனா பதிவிட்டுள்ள இந்த கிளாமர் புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்... குடிபோதையில் கார் ஓட்டிய பிரபல தமிழ் பட இயக்குனர்... மடக்கிப் பிடித்து காரை பறிமுதல் செய்த போலீஸ்

click me!