சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள இராமாயணம் தொடரின் புரோமோ வெளியான நிலையில், அதை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
சன் டிவி சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதுமே மவுசு அதிகம். அந்த வகையில் தற்போது எதிர்நீச்சல், சுந்தரி, கயல், இனியா, சிங்கப்பெண்ணே என பல்வேறு சூப்பர் ஹிட் சீரியல்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகும் நிலையில், புதிதாக மேலும் ஆறு சீரியல்களை சன் டிவி களமிறக்கி இருக்கிறது. அதில் இராமாயணம் சீரியலும் ஒன்று. அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில் சீதையின் இதயநாயகன் என்கிற டேக் லைன் உடன் நேற்று இராமாயணம் தொடரின் புரோமோவை வெளியிட்டது சன் டிவி.
அந்த புரோமோ வெளியானதும், அதை வறுத்தெடுத்து வருகின்றனர் நெட்டிசன்கள். ஏனெனில் தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் செய்யும் போது பாஜக மத அரசியல் செய்வதாக குற்றம் சாட்டிய திமுக, தற்போது அவர்களுடைய சேனலில் இராமாயணம் தொடரை ஒளிபரப்புவதை பார்த்த நெட்டிசன்கள் நீங்களும் சங்கியாக மாறிவிட்டீர்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமின்றி விவரமாக தேர்தல் முடிந்ததும் இந்த புரோமோவை வெளியிட்டு உள்ளதாகவும் சாடி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... காதல் தோல்வியால் கப்சிப்னு ஆன கமல் மகள்... பிரேக் அப் பற்றி ஸ்ருதியின் மாஜி காதலன் சாந்தனு சொன்னதென்ன?
இந்த இராமாயணம் தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்து திருமுருகன் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது : “ஆரிய ஆதிக்கத்தின் அடையாளத்தை தமிழர் மண்ணில் விதைக்க முயலும் சன் நிறுவனத்தின் துரோகத்தனமான வணிகத்திற்கு எதிராக அணி திரளுவோம். திராவிட இயக்கத்தின் உழைப்பில் வளர்ந்து, பெரியாரின் அரசியலில் அதிகாரத்தை பிடித்து, தமிழ்நாட்டின் அரசியலின் வேருக்கு நஞ்சு பாய்ச்ச நினைப்பவர் எவராயினும் அவர் எம் பகைவரே.
வடவர் மதவெறி அரசியலை தமிழ்நாட்டில் வளர்க்க நினைக்கும் எவரும் எம் இனத்தின் துரோகிகளே. பெரியாரின் சீடர்கள் செத்துவிடவில்லை சன் குடும்பத்தாரே! சமரசமற்ற எம் தோழர்கள் கருப்பு சட்டையுடன் களத்தில் எதிர்கொள்வோம் உம் ஈனச்செயலை!! தேர்தல் முடியும் வரை காத்திருந்து கழுத்தறுக்க நினைக்கும் உம் அயோக்கியத்தனத்திற்கு தமிழினம் தக்கவகையில் பதில் சொல்லும்!” என கேள்வி எழுப்பி இருக்கிறார். இதுமட்டுமின்றி இராமயாணம் தொடருக்கு எதிராக மீம்ஸ்களும் குவிந்த வண்ணம் உள்ளன. இது திமுக-விற்கு பெரும் தலைவலியாக மாறி இருக்கிறது.
ஆரிய ஆதிக்கத்தின் அடையாளத்தை தமிழர் மண்ணில் விதைக்க முயலும் சன் நிறுவனத்தின் துரோகத்தனமான வணிகத்திற்கு எதிராக அணி திரளுவோம். திராவிட இயக்கத்தின் உழைப்பில் வளர்ந்து, பெரியாரின் அரசியலில் அதிகாரத்தை பிடித்து, தமிழ்நாட்டின் அரசியலின் வேருக்கு நஞ்சு பாய்ச்ச நினைப்பவர் எவராயினும்… https://t.co/w1zJoYyAM2
— thirumurugan gandhi (@thiruja2009)இதையும் படியுங்கள்... டிஆர்பி-யில் குக் வித் கோமாளியை காலி பண்ண ‘டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சியில் களமிறங்கும் லெஜண்ட்